Author: Prime Reporter
தற்போதைய காலத்தில் வரும் காதல் படங்கள் சற்று வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அப்படி காதல் கதையில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம்தான் வித் லவ். புதுமுக இயக்குநர் மதன் இந்த படத்தை இயக்க, டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்தார். மேலும் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனம் வந்ததால், நாளுக்கு நாள் வசூலும் கூடி வருகிறது. படம் வெளியான 4 நாட்களில் இதுவரை 12.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது,.
டிஎன்பிஎஸ்சி சார்பில் நேற்று நடக்கவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் தேர்வு எழுத தயாராக இருந்த மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் வரும் மார்ச் 15ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி 28க்குள் இணையத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 2க்கான முதன்மை தேர்வு அதே தேதியில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாளையம் அறிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த லீக் சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் இடையே போட்டி நடந்தன. முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் எடுத்தன. இதையடுத்து 104 என்ற எளிமையான இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி தொடக்க வீரர் பிரையன் பென்னட், சிறப்பாக விளையாடி 48 ரன்களை எடுத்தார். மருமானி 21 ரன்கள் எடுக்க, பிரண்டன் டெய்லர் 31 ரன்கள் எடுத்தார். 13.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி காரணமாக TEAM B அணியில் உள்ள 5 நாடுகளில் 2 புள்ளிகளை பெற்று ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது. இலங்கை, 2வது இடத்திலும், அயர்லாந்து,…
காதல், அதிரடி படங்களை கொடுத்து வந்த கவுதம் வாசுதேவ் மேனன் புதிய பாதையை தேர்வு செய்துள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து வருகிறார் கவுதம் மேனன். திரைத்துறையில் 25 ஆண்டுகளை கவுதம் மேனன் நிறைவு செய்துள்ளார். தொடர்ச்சியாக நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பிஸியாக இருக்கும் கவுதம் மேனன், அடுத்ததாக ஒரு புத்தம் புதிய கதையை கொண்டு படத்தை இயக்க உள்ளார்,. சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், அடுத்த படம் காதல் கதையை மையமாக வைத்து எடுக்க உள்ளேன். பெரிய ஹீரோக்கள் காதல் கதைகளில் நடிக்க தயாராக இல்லாததால், நான் இளம் நடிகர்களை தேடிக் கொண்டிருக்கிறேன். புதிய நடிகர் ஒருவரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளேன், நானும் சிம்பு கூட நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படத்தை எடுக்க திட்டமிட்டோம். ஆனால் ஆக்ஷன் குறைவு என்பதால், வெந்து தணிந்தது காடு படத்தை எடுத்தோம். இப்போது GENZ காதல் வித்தியாசமானது…
தூத்துக்குடி விமான நிலையத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் இரண்டு மகளிர் அணி மாநாடு கோவை மண்டலத்திற்கும் தஞ்சை மண்டலத்திற்கும் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. இளைஞரணி மாநாடு விருதுநகரிலும் திருவண்ணாமலையிலும் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதற்குப் பிறகு தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது அதற்கு பின்பு மாநில மாநாடு நடைபெறும். இதற்குப் பின்பு இளைஞர் அணி மகளிர் அணி மாநாடு இருக்காது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியவில்லை. வேறு யாருக்கும் பேசக்கூடிய வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சி தலைவரே கூட இல்லை பிரதமரே நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பயப்படக்கூடிய சூழ்நிலை அவர்களுடைய ஆட்சியிலே இருக்கு என்று அவர்களே சொல்கிறார்கள். நிச்சயமாக பிரதமர் இப்படிப்பட்ட ஒப்பந்தம் அமெரிக்காவோட வெளிநாடுகளோடு செய்யப்படும்போது அமைச்சர்கள் நாடாளுமன்றம் நடந்து கொண்டு இருக்க கூடிய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் அதைப்பற்றி விளக்கமாக தெரிவிக்க வேண்டும் அதுதான் மரபு.…
சட்டக்கல்லூரியில் வகுப்புக்குள் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு சட்டக் கல்லூரியில் இன்று காலை அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. ஏராளமான மாணவர்கள் பயிலும் அந்தக் கல்லூரியில், காலை 9.15 மணியளவில் வகுப்பறையில் இருந்த பிரின்ஸ் ராஜ் என்ற மாணவர், திடீரென எழுந்து துப்பாக்கியை எடுத்து, பின்னால் அமர்ந்திருந்த சக மாணவி சந்தீப் கவுர் மீது சுட்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் வகுப்பறையில் இருந்த மாணவிகள் அலறியடித்து வெளியே ஓடினர். இதன் பின்னர், பிரின்ஸ் ராஜ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரை முடித்துக் கொண்டார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார்…
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறது தமிழக அரசியல் கட்சிகள். இதனிடையே திமுக – தவெகவுக்குத்தான் போட்டி என விஜய்யின் தவெக கட்சியினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து கடுமையாக பேசியுள்ளார். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தான் தவெக. இவங்களெல்லாம் அதிமுகவை பற்றி பேச என்ன அருகதை இருக்கு. ஆதவ் அர்ஜூனா அதிமுக குறித்து பேச எந்த தகுதியும் இல்லாத நபர். முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாகமே தெரியாதவர். சிறந்த நிர்வாகத்தை நடத்தி காட்டியவர் எடப்பாடி பழனிசாமி. எனவே அவருக்குதான் மக்கள் ஓட்டு போட முடிவெடுத்துவிட்டார்கள். எம்ஜிஆர் காலத்தில் இருந்து இப்போது வரை திமுக – அதிமுக இடையேதான் நேரடி போட்டி. எனவே மற்றவர்களை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். அரசியல் பண்பாட்டை…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சட்டத்தை அமல்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் உண்டு. ஆனால், ஒருவர் எந்த மாநிலத்திலிருந்து வந்தவர் என்பதைக் காரணமாகக் கொண்டு, அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கோ, புலம்பெயர் தொழிலாளர்களை தொந்தரவு செய்வதற்கோ, அவமதிப்பதற்கோ அல்லது தாக்குதல் நடத்துவதற்கோ அவர்களுக்கு உரிமை இல்லை. இத்தகைய செயல்கள் தமிழ்நாடு மாநில காவல்துறையிலேயே நடைபெறுவதை காணும்போது, மாநிலம் முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள், ஊழல்மிக்க திமுக அரசின் கண்காணிப்பின் கீழ், உடல் மற்றும் வாய்மொழி துன்புறுத்தல்களுக்கு அதிகமாக உள்ளாகி வருவது ஆச்சரியமளிப்பதல்ல. தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் வழங்கும் இன்றியமையாத பங்களிப்பை நாம் இப்போது உணர்ந்து, ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் இது. மெட்ரோ ரயில் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமானம் முதல் குடியிருப்பு கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சிறிய உற்பத்தி அலகுகள் வரை — நமது பொருளாதார நடவடிக்கைகளின் ஒவ்வொரு தூணும் அவர்களின் உழைப்பின் மீது பெரிதும்…
watermelonஐ வைத்து ஸ்டாராக உருவான திவாகரை கொஞ்சம் பேருக்குதான் தெரியும் என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய பின் பிரபலமாக மாறிவிட்டார். பிக்பாஸ் சீசனுக்கு பின் திவாகர் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பல அவமானங்கள், கேலி, கிண்டல்களுக்கு அப்பறமாக எனக்கு ஹீரோவா நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. நடிப்பு அரக்கனை நீங்கள் வெள்ளித்திரையில் பார்க்க போறீங்க, எனக்கு வரப் போகிற மனைவி திரிஷா, சமந்தா போல இருக்க வேண்டும் என கூறினார். அப்போது செய்தியாளர் குறுக்கிட்டு, திரிஷாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூற, அதற்கு பதிலளித்த திவாகர், நான் அவங்களை விட சின்ன பையன் என கூறினார். மேலும் என் வயதை பற்றி சிலர் தவறாக எழுதுகிறார்கள், என்னுடைய பிறந்த வருடம் 1988 என்று அப்போது அவர் கூறினார்.
உலகக் கோப்பை டி20 போட்டி நடைபெற்று வருகிறது. ஆப்கானிஷ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடை யயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை பார்க்க வந்த பார்வையாளர்களிடம் இருந்து விசில் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,. மேலும் மைதானத்திற்குள் விசில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டதால் பேசு பொருளானது. இது குறித்து தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் “விசில்” சத்தம் கேட்டால் சித்தரஞ்சன் சாலையில் இருப்பவர்களுக்கு தூக்கம் போய்விடுகிறது..! சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! விசிலின் ஓசையில் தளபதியின் ஆட்சி நடக்கும்..! என பதிவிட்டுள்ளார்.
