தேவையான பொருட்கள்
- சாதம் (வடித்தது) – 2 கப்
- பீர்க்கங்காய் – 1 (தோல் சீவி பொடியாக நறுக்கியது)
- சின்ன வெங்காயம் – 10 முதல் 12 (நறுக்கியது)
- தக்காளி – 1 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- மசாலா தூள்கள்: மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
- தாளிக்க: எண்ணெய் / நெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை
- உப்பு – தேவையான அளவு
அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!
செய்முறை
Step 1: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.
Step 2: அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
Step 3: வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கி, பின்னர் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயைச் சேர்க்கவும். (பீர்க்கங்காயில் தண்ணீர் அதிகம் இருக்கும் என்பதால் கூடுதல் தண்ணீர் தேவையில்லை).
Step 4: இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் பீர்க்கங்காய் சுருண்டு வெந்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
Step 5: மசாலா தயார்பானதும், வடித்து வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து மென்மையாகக் கிளறி, இறுதியாகக் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான பீர்க்கங்காய் சாதம் தயார்!

