Author: Prime Reporter
தாடிச் சிங்கத்தின் தமிழ் கேட்டு நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது… கமல்ஹாசனுக்கு வைரமுத்து பாராட்டு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கமல் பேசிய உரை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல் உரையை பேசினார் கமல்ஹாசன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறி தொடங்கிய கமல்ஹாசன், ஆங்கிலத்தில் சரளமாக பேசி பின் தமிழில் முடித்தார். அவர் தமிழில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாடலாசிரியர், கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில், கமல்ஹாசன் எம்.பி அவர்களின் நாடாளுமன்ற உரைக்கு எனது பாராட்டும் அவர் பேசி அனுப்பிய விடையும்… “அன்புள்ள கமல் எம்.பி அவர்களே! கன்னிப் பேச்சல்ல; காளைப் பேச்சுஒரு தேசியவாதியின் மொழி ஆனால், தமிழச் சாதியின் குரல் நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது தாடிச் சிங்கத்தின்தமிழ் கேட்டும்; ஆங்கிலம் கேட்டும்.. என்னையறியாமல் மீசை முறுக்கின என் கட்டை விரலும் சுட்டு விரலும்.. காடு அதிரட்டும்களிறே பிளிறு” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களின் தந்தை, மறைந்த கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த அரசாணை எண் 354 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி, தமிழக அரசு மருத்துவர்கள் நான்கரை ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மருத்துவர்களை சந்தித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மருத்துவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த திரு ஸ்டாலின், தற்போது அரசு மருத்துவர்களின் குரலை திட்டமிட்டு மவுனப்படுத்தி வருகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்கள், இன்று தங்கள் ஊதியத்துக்காக போராட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாண்புமிகு நீதிமன்ற உத்தரவையும், தேசிய மருத்துவ அமைப்பின் அறிவுறுத்தலையும் கூட, திமுக அரசு ஒரு பொருட்டாக கருதவில்லை. அரசு மருத்துவர்களுக்கு, 12 ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய ஊதியப்பட்டை நான்கும் மறுக்கப்படுகிறது. DACP ஊதியமும் மறுக்கப்படுகிறது. பதிலாக, திமுக…
பல வெற்றி படங்களின் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வருகிறது “அரசன்” திரைப்படம். இதில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சிம்பு இந்த படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. முன்னதால் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியில் “ஜனநாயகன்” திரைப்படத்தின் வெளியீடு மற்றும் நடிகர் விஜய் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், “விஜய் பல ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வருகிறார். ஜனநாயகன் அவரது கடைசிப் படம் என்பதால், அந்தப் படம் வெளியாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் ட்வீட் செய்தேன். அரசியல் குறித்து எனக்கு அறிவில்லை; அதைப் பற்றி பேச நான் சரியான நபரும் அல்ல. அவரது அரசியல் பயணத்திற்கு எனது வாழ்த்துகள்,” என்று தெரிவித்தார்.
நடிகர் தனுஷ் நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையோடு சினிமாவில் கோலோச்சி வருகிறார். நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து படத்தில் பிஸியாக நடித்து வரும் தனுஷ், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி என நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் இணைந்துள்ளார். படம் தொடர்பான அப்டேட்டுகள் தினம் தினம் வலம் வந்த நிலையில், இன்று பட பூஜை வெகு விமர்சையாக நடந்துள்ளது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையைமக்கிறார். பிரம்மாண்டமாக ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது. படத்தின் பூஜை விழாவில் பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பட பூஜையே இந்தளவுக்கு பிரம்மாண்டமாக நடத்தியிருக்காங்களே என நெட்டிசன்கள் வாயை பிளந்து வருகின்றனர்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திமுக எம்.பி. திருமதி கனிமொழி, எப்போதும் போல உண்மைகளை அறியாமல் பேசுகிறார். தனது சகோதரரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் அவர்களின் ஊழல் நிரம்பிய தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொள்ளவில்லை. தற்போது தமிழ்நாட்டில் ரூ.35,701 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு தவறியதால், இந்த திட்டங்களின் செயல்பாடு தாமதமாகி வருகிறது. இந்த ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற தேவையான 4,326 ஹெக்டேர் நிலங்களில், 2025 டிசம்பர் நிலவரப்படி, தமிழ்நாடு அரசு வெறும் 24% நிலங்களையே கையகப்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தப்படாமல் பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இதே நிலை தமிழ்நாட்டுக்காக அனுமதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பொருந்துகிறது. ஏற்கனவே அனுமதி பெற்ற திட்டங்களை செயல்படுத்துவதில், ஊழல்மிக்க திமுக அரசு திட்டமிட்டு ஏற்படுத்திய…
சென்னை செல்வதற்காக கோபியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றி கழகத்தில் என்ஜின் இல்லை என்று பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள், இரண்டு இயக்கங்களே இந்த நாட்டை ஆள வேண்டுமா புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணங்களோடு தான் இந்த இயக்கம் தற்பொழுது வீர நடை போட்டு கொண்டிருக்கிறது என தெரிவித்தார். பல கோடி ரூபாய் வருவாயை இழந்தாலும் விஜய் மக்கள் பணியாற்றுவதற்காக ஒரு இளைஞர் என்ற முறையில் வந்திருக்கிறார், அவரை பற்றி எல்லோரும் கருத்து சொல்வதற்கு காரணம் என்னவென்றால் எல்லோருக்கும் பயம் ஏற்பட்டு இருக்கிறது வெற்றி என்ற இலக்கை அடைய முடியாத காரணத்தினால் தான்…
மத்திய பாஜக வெளியுறவுக் கொள்கை குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், தீபாவளிப் பண்டிகையை உலக பாரம்பரியங்களின் பட்டியலில் இனைத்ததற்காக யுனெஸ்கோவை குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டியது மோடி அரசு. அதே யுனெஸ்காகோவிற்கான நிதியை நிறுத்திய டிரம்ப் அரசுக்கானப் பாராட்டை இன்றைய பட்ஜெட் விவாத்தில் ஆளுங்கட்சியிடமிருந்து எதிர்பார்க்கலாம். தென்னமரத்துக்கு ஒரு குத்து! ஏணிச் சின்னத்துக்கு ஒரு குத்து! இதுதான் பாஜகவின் வெளியுறவுக் கொள்கை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பால் கொழுக்கட்டை என்பது அனைவரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகும், இது மிகவும் சுவையாகவும், கிரீமி சுவையுடனும் இருக்கும். இந்த பால் கொழுக்கட்டை அதன் இனிப்புச் சுவை மற்றும் சாப்பிடுவதற்கு அருமையாக இருப்பதால் குழந்தைகளிடையே மிகவும் பிரபலமானது. பால் கொழுக்கட்டை செய்வதற்கான ஒரு எளிய செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1 கப் அரிசி மாவு1 கப் தண்ணீர்1 டீஸ்பூன் நெய்ஒரு சிட்டிகை உப்பு1½ கப் கெட்டியான தேங்காய்ப் பால்1 கப் நீர்த்த தேங்காய்ப் பால்½ கப் வெல்லம் (அல்லது விருப்பத்திற்கேற்ப சர்க்கரை)¼ டீஸ்பூன் ஏலக்காய் தூள் செய்முறை:
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளவர். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையை வைத்துள்ளவர். கடைசியாக இட்லி கடை படத்தை இயக்கியிருந்த தனுஷ், தற்போது ராஜ்குமார் பெரியசாமி படத்தில் இணைந்துள்ளார். அமரன் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த அவர் தற்போது தனுஷ் உடன் இணைந்துள்ளளார். இந்த படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி என முக்கிய நடிகைகள் இணைந்த நிலையல், மெகா ஸ்டார் மம்முட்டி முக்கிய கதாபாத்திரர்ததில் நடிக்க உள்ளார். இது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனுஷ் 55வது படத்தின் நடிகர் நடிகைகள் இணைந்துள்ள நிலையில், 7 வருடம் கழித்து மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி தமிழ் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் கடவுளான முருகன், எண்ணற்ற கோவில்களில் வழிபடப்படுகிறார், அவற்றில் பல புகழ்பெற்ற யாத்திரை மையங்களாக உள்ளன. இருப்பினும், புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளுக்கு அப்பால், முருகனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பல மறைக்கப்பட்ட பழங்காலத் தலங்களிலும் அமைந்துள்ள இந்தக் கோவில்கள், அமைதியையும் தெய்வீக ஆசீர்வாதங்களையும் நாடும் பக்தர்களுக்கு ஒரு தெய்வீகப் புகலிடமாக அமைகின்றன. தமிழ்நாட்டில் அமைந்துள்ள விராலிமலை முருகன் கோவில், தெய்வீக நிகழ்வுகள் மற்றும் ஆன்மீக வரலாற்றைக் கொண்ட முக்கியத்துவம் நிறைந்த ஒரு வளமான கோவிலாக உள்ளது. புராணக் கதை: சாஸ்திரங்களின்படி, முருகனின் புகழ்பெற்ற பக்தரான அருணகிரிநாதர், விராலிமலைக்குச் செல்லுமாறு முருகன் அவருக்குக் கட்டளையிட்ட ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். அவர் அந்தப் பகுதியை அடைந்தபோது வழி தவறியபோது, முருகன் ஒரு வேட்டைக்காரர் வடிவில் தோன்றி, அவரை கோவிலுக்கு வழிகாட்டினார், இது அருணகிரிநாதரின் பக்தியை மேலும் வலுப்படுத்தியது. ஒரு ஆசீர்வாதமாக, முருகன் அவருக்கு அஷ்ட சித்திகளை (எட்டு அமானுஷ்ய சக்திகள்) வழங்கினார் மற்றும் தனது தெய்வீக…
