Author: Prime Reporter

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க பலவிதமான காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் பிற உணவுமுறைகள் என பல இருக்கின்றன. இந்த உணவுகள் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுகளை உங்கள் உணவில் அதிகமாகச் சேர்ப்பதன் மூலம், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் நீங்கள் குறைக்கலாம். பெர்ரி பழங்கள் பெர்ரி பழங்கள் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். அவற்றில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆந்தோசயனின், எலாஜிக் அமிலம் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நமது செரிமான மண்டலத்தில் புற்றுநோயைத் தடுக்க உதவும். மீன் மீனில், குறிப்பாக சால்மன், சூரை மற்றும் நெத்திலி போன்ற எண்ணெய் மீன்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களும் புரதமும் உள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் மிக உயர்ந்த உணவு ஆதாரங்களில் ஒன்றாக இருக்கும் மீன், அழற்சியை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. பருப்பு…

Read More

தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் 2011ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவில் நடித்து வந்தார். ஆனால் கீதா கோவிந்தம் திரைப்படம் தான் அவருக்கு திருப்பத்தை தந்தது. அந்த படத்தில் நாயகியாக நடித்தவர் ராஷ்மிகா.கர்நாடகாவை சேர்ந்த இவர், கன்னட படங்களை விட தெலுங்கு படங்களில் வாய்ப்பு அதிகமாக கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆனார். கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது முதல் விஜய் ராஷ்மிகா இடையே காதல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் இருவரும் இதை மறுக்கவில்லை. தொடர்ந்து இருவரும் படங்களில் நடித்து வந்த நிலையில், ராஷ்மிகாவோ பான் இந்திய சினிமா ஸ்டாராக உயர்ந்தார். தமிழ், ஹிந்தி என இந்திய சினிமாவில் பேசப்பட்டார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய போவதாக தகவல் பரவியது. உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இது வதந்தி என்பது உறுதியானது. இது குறித்து ஹிந்தி ஊடங்களில் பேசியுள்ள ராஷ்மிகா,…

Read More

இயக்குனர் பாரதி ராஜா இயக்கிய மண் வாசனை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, பிரபு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து 80களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தார். மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து 80களில் பான் இந்திய ஸ்டாராக உயர்ந்தார். தொடர்ந்து ரேவதி நடிக்க மட்டும் செய்யாமல், தயாரிப்பு, இயக்குனர் என பன்முக திறைமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக மிடிர், பாய் பிரெண்ட் ஆகிய ஆங்கில படங்களை இயக்கினார். படம் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் சிறந்த ஆங்கில படத்துக்கான விருதையும் பெற்றார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் 11ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது பேருந்தில் பயணம் செய்தேன்.அப்போது ஒரு நபர் என்னிடம் தவறாக நடந்தான். உடனே அந்த இடத்தில வைத்தே அவனை பளார் என்று அறைந்துவிட்டேன். பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.…

Read More

கடந்த வாரம் மகாராஷடிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் வெடித்து சிதறியதால் அவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சரான பங்கஜா முண்டே இன்று காலை லத்தூர் செல்ல புறப்பட்டார். லத்தூரில் மாவட்ட கவுன்சில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதனிடையே திடீரென்று அவர் பயணம் செய்ய வேண்டிய ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனே விமானி இந்த தகவலை அமைச்சரிடம் கூற, அவர் தனது பயணத்தை ஒத்திவைத்தார்.

Read More

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில், கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருப்பது, தமிழகத்திற்கே தலைகுனிவு. புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில், கஞ்சா பொட்டலம் என்பது, வருங்கால சந்ததியினர் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்கள், கடந்த நான்கு ஆண்டுகளில், மிக, மிக அதிகரித்துள்ளன. சமீபத்தில், திருத்தணி ரெயில் நிலையத்தில், கஞ்சா போதையில், ஒரு வடநாட்டு இளைஞரை, இளம் சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய காணொளியை பார்த்தோம். அதன் பிறகாவது, இந்தச் சொரணையற்ற திமுக அரசு, கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கஞ்சா வியாபாரிகளுக்கும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் திமுகவில் பதவி…

Read More

சமீபத்தில் இந்திய சினிமா முழுவதும் தனுஷ் குறித்து ஒரு வதந்தி பரவியது. தனுஷ், நடிகை மிருணாள் தாகூரை மணமுடிக்கிறார் என்ற தகவல் தீயாய் பரவியது. வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று இருவரும் திருமணம் செய்ய போகிறார்கள் என கூறப்பட்டு வந்தது. பலரும் பலவிதமான கருத்துக்களை முன் வைத்தனர். ஆனால் இது குறித்து இருவரும் எந்த தகவலும் கூறவில்லை. இந்த நிலையில் திருமண விவகாரம் குறித்து முதன்முறையாக நடிகை மிருணாள் தாகூர் மனம் விட்டு பேசியுள்ளார். அதில் என்னை பற்றியும் தனுஷ் குறித்து பேசுவது அத்தனையும் பொய். எதுவும் ஆதாரமற்ற செய்திக, எப்போதும் எனக்கு அவர் நல்ல சகோதரர் மட்டும்தான் என கூறி வதந்தி பரப்புவர்களின் வாய்க்கு பூட்டு போட்டுள்ளார்.

Read More

பாஜக கொடுத்த தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பம்பரம் போல சுழன்று பணியாற்றி வருகின்றனர். இதனிடையே விருகம்பாக்கம், சிங்காநல்லூர் உட்பட 6 தொகுதிகளுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தனது தந்தையின் உடல்நலம் சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதனால் சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேறு பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “என் தந்தையின் உடல்நலக் காரணமாக தற்போது நான் கோவையில் இருக்கிறேன். அவரை கவனிப்பது எனது கடமை. வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து தற்போது கூற முடியாது; அதற்கு காலமே பதில் சொல்லும். தந்தையின் உடல்நிலை காரணமாக சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுகிறேன். இது குறித்து…

Read More

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழக அரசியலில் நிதர்சனமான, உண்மையான போட்டி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையேதான் உள்ளது. நடிகர் விஜயை ஒரு அரசியல் சக்தியாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ‘நானும் ரவுடிதான், என்னை ஜீப்பில் ஏற்றுங்கள்’ என்று ஒருவர் கூறினால் அதை எப்படி ஏற்க முடியும்?” என விமர்சித்தார். மேலும், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து எந்தக் குற்ற உணர்ச்சியும், ஈவு இரக்கமும் இன்றி கட்சியின் ஆண்டு விழாவில் நடிகர் விஜய் நடனம் ஆடியதாக குற்றம்சாட்டினார். “அந்த குடும்பங்கள் எவ்வளவு மனவேதனை அனுபவித்திருப்பார்கள் என்பதை அவர் சிந்திக்கவே இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “த.வெ.க. தலைவராக இருக்க நடிகர் விஜய்க்கு அரசியல் அருகதை இல்லை. லாட்டரி மூலம் கிடைக்கும் பணத்தில்தான் அவர் அரசியல் கட்சியை நடத்துகிறார். எங்களைப் பொறுத்தவரை அரசியல் போட்டி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையே மட்டுமே” என்றார்.…

Read More

தமிழ்நாடு அரசின் உலகளாவில் சுற்றுலா உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமாக இமேஜிகா Imagica World Entertainment நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சுமார் ரூ.650 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ள இத்திட்டம் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் இமேஜிகா நிறுவனம் புதிய Amusement Parkஐ அமைக்க உள்ளது. சென்னையில் வொண்டர்லா நிறுவப்பட்டுள்ள நிலையில், அடுத்தபடியாக முக்கிய நகரமாக கருதப்படும் கோவையை இமேஜிகா நிறுவனம் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப்பெரிய தீம் பார்க், ஓட்டல் நிறுவனங்களில் ஒன்றான இமேஜிகா தமிழகத்தில் கால் பதிக்க உள்ளதால் சுற்றுலாத்துறையில் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது.

Read More

சில காதல்கள்… கத்திப் பேசாது. அவை… அமைதியாக மனதில் பதியும். வெறும் காதல் கதை மட்டுமல்லாமல், இன்றைய தலைமுறையின் உணர்வுகளை அமைதியாக ஆனால் ஆழமாக பேசும் சினிமா தரமான கதைகளைத் தேர்வு செய்யும் ஜோ திரைப்பட தயாரிப்பாளர்களின் அடுத்த சினிமா முயற்சி… ‘ஹைக்கூ’. நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஜோ, கோழிப்பண்ணை செல்லத்துரை படங்கள் மூலம் கவனம் பெற்ற ஏகன், இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன், மின்னல் முரளி, சேஷம் மைக்கேல் பாத்திமா படப் புகழ் பெமினா சார்ஜ் மற்றும் கோர்ட் திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜோ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஹரிஹரன் ராம், ஹைக்கூ படத்திற்கு கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குவது யுவராஜ் சின்னசாமி. இதற்கிடையே, நடிகர் ஏகன் நடிக்கும் ஹைக்கூ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே உலகளாவிய OTT…

Read More