Author: Prime Reporter

நல்ல தரமான திரைப்படங்களை பாராட்டி, ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சினிமா விருது வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு சினிமா விருதுகளுக்கு தேர்வான திரைப்படங்கள், கலைஞர்கள் பெயர் வெளியானது. விருதுக்கு தேர்வான பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வந்தனர். ஆனால் ஒரு சில பிரபலங்கள் தரமான படங்களை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தையும் முன் வைத்தனர். அந்த வகையில் இயக்குநர் சேரனும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பெண்களுக்கு இலவச பஸ்.. வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவித்தொகை.. திருமணத்திற்கு அரசு உதவி.. இதையெல்லாம் செய்யும் அரசு .. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்.. வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த “திருமணம்” திரைப்படம் தேர்வுகுழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற…

Read More

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் தனக்காக ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். அடுத்தடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் தனுஷ், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கடைசியாக இவர் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க கமிட் ஆகியுள்ளார். D55 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தனுஷின் Wonder bar Studio தயாரிக்கிறது. ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது நடிகை சாய் பல்லவியும் இணைந்துள்ளார். இருவரும் மாரி 2 படத்தில் ஏற்கனவே நடித்திருந்தனர். மேலும் இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

விஜய் இனி டான்ஸ் ஆடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தவெக தொடங்கி இன்றுடன் 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையடுத்து தவெக சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக தலைமையில் மற்றும் பலர் என கூட்டணி குறித்து விமர்சித்து பேசினார். இது குறித்து நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, விஜய்க்கு எதுவும் தெரியாது என நினைக்கிறேன், கட்சியின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஆடிக்கொண்டு இருக்கிறார். ஒரு நாட்டில் ஒரு கட்சியின் தலைவர் இப்படி மேடையில் தமிழ்நாட்டின் கலாச்சாரமே தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார். அவர் டான்ஸ் மட்டும் தான் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். என்டிஏ கூட்டணியில் பாஜக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கின்றன,. அது கூட தெரியாமல் விஜய் பேசிக்கொண்டிருந்தால் எப்படி என விமர்சித்தார்.

Read More

தனியார் பிரபல ஆங்கில ஊடகத்தின் சார்பாக விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பங்கேற்றார். வழக்கம் போல காரசாரமாக பதில் சொல்லிக்கொண்டிருந்த ஹெச் ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. முதலுதவி கொடுத்தும் முன்னேற்றம் ஏற்படாததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த கொதிப்பு மற்றும் முடக்கு வாதம் காரணமாக ஹெச் ராஜா பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்து. இதையடுத்து ஹெச் ராஜா உடல்நலம் குறித்து நேரிலும், தொலைபேசியிலும் அரசியல் கட்சி தலைவர்கள் விசாரித்து வந்தனர். நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்திருந்தார். இந்த நிலையில் இன்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்றார். ஹெச் ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்களை, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், இன்று சென்னையில் மருத்துவமனையில்…

Read More

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், சாலை விபத்தில் இந்து உயிர்தப்பிய சிறுமியின் காட்சி வெளியாகியுள்ளது. கோழிக்கோடு கொடியத்தூர் பகுதியில் ஆட்டோவில் தனது தந்தையுடன் குழந்தை மருத்துவமனைக்கு வந்திருந்தது. அப்போது ஆட்டோ நின்றவுடன், இறங்கிய குழந்தை, சாலையின் மறுபுறம் நின்றிருந்த தாயிடம் ஓடி சென்றது. அந்த நேரத்தில் தந்தை ஆட்டோ ஓட்டுநருக்கு கட்டணம் செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது, கோழிக்கோட்டிலிருந்து வந்துக் கொண்டிருந்த பேருந்தின் முன்பாக குழந்தை ஓடியது. எதிர்பாராத விதமாக குழந்தை சாலையை கடந்து ஓடுவதை பார்த்த ஓட்டுநர், உடனடியாக பேருந்தை வலப்புறமாக திருப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகி வருகின்றன. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சாலை விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய குழந்தை… pic.twitter.com/OfJqdzV3MY— Ramesh (@RHoneykumar) February 2, 2026 சாலையோரத்தில் வாகனங்களில் இருந்து இறங்கும் போது குழந்தைகள் மீது பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையாக இந்த சம்பவம்…

Read More

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் நுழைந்துள்ளார். அவரது கடைசி படமான ஜனநாயகன், இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. சென்சார் பிரச்சனையால் படத்திற்கு தடை தொடர்ந்து கொண்டே வருவதால், படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த 2024ஆம் ஆண்டு துவங்கியிருந்த நிலையில், 2 ஆண்டுகள் முடிந்து 3ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது. Vibe with Thalapathy @TVKVijayHQ 🕺🏽 pic.twitter.com/OZBdWT3GgB— Vijay Fans Trends (@VijayFansTrends) February 2, 2026 இன்று நடந்த 3ஆம் ஆண்டு துவக்க விழாவில், கட்சியினர் மத்தியில் விஜய் அனல் பறக்க பேசினார். அதில் ஒரு பகுதியாக, பாடகர் வேல்முருகன் பாடலை பாடினார். மேலும் விஜய்யை நடனமாட வேண்டும் என வேண்டுகோள் வைக்க, விஜய் நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியக்களில்…

Read More

இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 87வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அப்போது மாணவர் ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் இருந்து பட்டத்தை வாங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. வரிசையில் நின்றிருந்த மாணவர், ஆளுநர் பட்டம் வழங்கும் போது, முதல்வர் படத்தை இணைத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை தொடர்ந்து வந்த மாணவர்கள் சோதனைக்கு பிறகே மேடையேற்றப்பட்டனர். ஏற்கனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மாணவி மறுத்திருந்த சம்பவம் அரங்கேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலியே மயங்கி கிடந்தவர்கள், பார்ப்பனர்களின் வேள்வி யாகங்களில் மயங்கி கிடந்தவர்கள் மேலும் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னராக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை, உடன்பாடும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக…

Read More

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் ஹவுசிங் போர்டு காலனி அருகில் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ராஜ்குமார் (43), சுரேஷ் (24) மற்றும் சந்துரு (23) ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்து உள்ளார்.

Read More

சின்னத்திரை சீரியல்களில் டாப் 10 இடங்களில் எப்போதும் இருக்கும் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் சிறகடிக்க ஆசை. டிஆர்பி ரேட்டிங்கில் நிச்சயம் 10 இடங்களுக்குள் வந்துவிடும். பூ விற்கும் பெண்ணான மீனா, கௌரவமான குடும்பத்தில் குடிகாரனாக இருக்கும் முத்துவுக்கு மனைவியாக செல்கிறார். பிறகு முத்துவை எப்படி திருத்துகிறார், கூட்டுக்குடும்பமாக உள்ள கணவரின் குடும்பத்தை எப்படி கவனிக்கிறார், பணக்கார திமிர் பிடித்த மாமியாரின் கொட்டத்தை எப்படி அடக்குகிறார் என்பதே கதை. சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் அப்பாவி மீனாவாக வலம் வருபவர் நடிகை கோமதி பிரியா. இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த கோமதி, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படத்தை பதிவேற்றுவது வழக்கம். ஆனால் இந்த முறை புதிய ஹேர் ஸ்டைல், கண்களில் லென்ஸ் என வித்தியாசமாக மாடர்ன் லுக்கில் மாஸ் காட்டியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், என்னது இது சிறகடிக்க ஆசை மீனாவா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Read More