Author: Prime Reporter
நடிகரும் தவெக தலைவருமான விஜய் குறித்து அமைச்சர் கேஎன் நேரு சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, ஒரு போதும் அழுத்தத்திற்கு பயப்பட மாட்டேன் என கூறிய விஜய், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றார். தன்னுடைய படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது நடிகர் விஜய் அவருடைய தந்தையை அழைத்து கொண்டு ஜெயலலிதாவிடம் கைக்கட்டி நின்றனர். இப்போது வீரவசனம் பேசுகின்றனர் என கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்து தவெக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..! எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? ஒரு படம் வெளிவருவதில் வரும் இடையூறை அதிகாரத்திலிருக்கிற முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண கேட்டால் அது என்ன பஞ்சமா? பாதகமா? தவெக வை பற்றி கவலைப்படுகின்ற நேரு தன்னுடைய துறையில் 2000கோடிக்கு…
ஜனநாயகன் படத்தை வெளியீடு செய்வதில் மீண்டும் புதிய சிக்கல் எழுந்துள்ளது. கடந்த பொங்கலுக்கு விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் சென்சார் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. தணிக்கை சான்று வாங்க கோரி தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் முறையிட, வழக்கை விசாரித்த தனி நீதிபதி உடடினயாக தணிக்கை சான்று வழங்க உத்தவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்ய, தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா மற்றம் நீதிபதி அருள் முருகன் அமர்வு விசாரித்து, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தார். மேலும் தணிக்கை வாரியத்துக்கு உரிய அவகாசம் அளிக்கவில்லை, படத்தில் சில காட்சிகள் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் சென்சார் போர்டு தலைவர் படத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மீண்டும் வழக்கை தனி நீதிபதி ஆஷாவே விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணையில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சென்சார் போர்டுக்கு…
இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே மிகப்பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% மற்றும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்திய எரிசக்தி வார விழாவில் காணொளி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாகவும், அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என கூறியுள்ளார். அதாவது, இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களின் வரி விகிதம் கணிசமாக குறையும் என்பதால் விலையும் கணிசமாக குறைய உள்ளது. முக்கியமாக பல சொகுசு கார்கள் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யும் போது 110% வரை வரி விதிக்கப்படும். இதனால் காரின் விலை இரண்டு மடங்காகிறது. உதாரணத்திற்கு ஒரு கார், ஒரு கோடி ரூபாய் என்றால் விலை ரூ2 கோடி ஆகும். இந்தநிலையில் வரி குறைப்பதன் மூலம் 110%ல்…
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ள தனுஷ், தனது மனைவியும் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துவிட்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதையடுத்து தனுஷ்க்கு எதிராக பல சர்ச்சைகள் கிளம்பியது. எந்த ஒரு நடிகையும் விவாகரத்து செய்து விட்டால் அதற்கு காரணம் தனுஷ்தான் என தகவல் காட்டுத்தீ போல பரவியது. இப்படி தனுஷை சுற்றி ஏராளமான வதந்திகள் பரவி வரும் நிலையில், நடிகர் தனுஷ், பிரபல நடிகை மிருணாள் தாகூரை திருமணம் செய்ய போவதாகவும், வரும் பிப்ரவரி 14ஆம் தேதி இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக சோஷியல் மீடியாக்களில் பேச்சுகள் அனல் பறந்தன. இருவரும் காதலித்து வருவதாக சமீபத்தில் வெளியான தகவல் குறித்து இருதரப்பினரும் எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை. இதனால் நெட்டிசன்களுக்கு இது சான்ஸ் ஆக அமைந்துவிட்டது. இணையத்தில் தனுஷ் – மிருணாள் குறித்து ஏராளமான மீம்ஸ், வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. உச்சக்கட்டமாக இருவருக்கும் திருமணம்…
எனது அரசியல் பயணத்தில் இதுவரை நான் தடம் மாறவில்லை என பரபரப்பு விளக்கம் அளித்திருந்தார் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா. இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக வெற்றிக் கழகம் எனும் தமிழ்நாட்டின் முன்னணி வெகுஜன மக்கள் இயக்கத்தின் கட்டமைப்பு வலிமையை மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறது, நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற நமது ‘மாநில மற்றும் மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்.’ கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டலில், கழக நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பில், கழகத் தோழர்களின் ஒற்றுமையில், மக்கள் ஆதரவுடன் மாபெரும் மக்களாட்சி வரலாற்றைப் படைக்க உள்ளது தமிழக வெற்றிக் கழகம். மக்களின் வாக்களிக்கும் கடமைக்கு பக்கபலமாக, “ஊருக்கு ஊர்.. வீதிக்கு வீதி.. வீட்டுக்கு வீடு” முன்னின்று மக்களுக்காக ஜனநாயக பணி ஆற்ற உறுதியேற்றார்கள் நமது கழக செயல்வீரர்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் நமது வெற்றிச் சின்னம் ‘விசில்’-ஐ கொண்டு சேர்ப்போம்.…
பொங்கலுக்கு வெளியாக வேண்டிய விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சனையால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. ஜனநாயகன் படம் தெலுங்கு படமான பகவத் கேசரியின் ரீமேக் என சொல்லப்படுகிறது. இருப்பினும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் இயக்குநர் ஹெச் வினோத், இது விஜய் படம் என கூறிவருகிறார். இந்த நிலையில் படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதை லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். ஹெச் வினோத்தும், அண்ணனும் ஒரு நாள் கூப்பிட்டாங்க. ஒரு கேமியோ ரோல் இருக்கு.. அவ்ளோதான் சொல்ல முடியும் என லோகேஷ் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் அனுபவம் முக்கியம், அந்த அனுபவம் இல்லாத ஒருவருடன் கூட்டணி போட யாரும் விரும்பமாட்டார்கள். விஜய் பூஜ்ஜியம் மாதிரி.. பூஜ்ஜியத்துடன் எண் சேர்ந்தால் தான் மதிப்பு… அது போல அனுபவம் இருந்தால்தான் அரசியலில் ஒரு நபருக்கு மதிப்பு உயரும். எம்ஜிஆர் சினிமாவிலும், அரசியலிலும் தொடர்ந்து பயணித்தவர். ஒரே நேரத்தில் இரண்டிலும் வெற்றி கண்டவர். சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்து வெற்றி பெறுவது கஷ்டம். நடிகர் விஜய், தனது ரசிகர்களையும், தொண்டர்களையும் ஏமாற்றும் வகையில் அவசர முடிவுக எடுக்கக்கூடாது அதுபோல அவர் என்டிஏ கூட்டணிக்கு வந்தால், தொடர்ந்து நிம்மதியாக அரசியலை தொடரலாம், மாறாக திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அனுபவம் இல்லாததால் அதிமுக…
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்துவை நேற்று சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் பதிவிட்டுள்ளதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று எனது இல்லத்திற்குவருகை தந்தார் ‘பாசமுள்ள மனிதனப்பா – நான் மீசவச்ச குழந்தையப்பா’ என்ற வரிகளுக்குஇப்போதும் அவர்தான் இலக்கியமாக இலங்குகிறார் வியப்புக்குரிய மனிதர்தான். அடித்துக்கொண்டோடும் அரசியல் வெள்ளம், சாய்த்துவிட்டோடும் சமூகப் புயல் இரண்டையும் அரைநூற்றாண்டாய்க் கடந்து தன்னிடத்தை ஒருவர் தக்கவைத்துக் கொள்வது ஜாதகத்தால் ஆவதல்ல; சாமர்த்தியத்தால் ஆவது உணவு முறை உடல் நிலை குறித்து ஊடாடிய எங்கள் உரையாடல் ஊர் சுற்றக் கிளம்பியது எங்கள் நூறு நிமிட உரையாடலை ‘கிரீன் டீ’ கூடக் கெடுக்கவில்லை. தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்து விவாதித்தோம். ஒவ்வொரு தரவிலும் அவருக்குள்ள ஆழமும் தெளிவும் உண்மையும் என் ஆர்வத்தைத் தூண்டின. வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு…
இயக்குநர் மோகன் ஜி உருவாக்கிய திரௌபதி படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. கலவையான விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்தன. இருப்பினும் அதே கூட்டணியை வைத்து இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் மோகன் ஜி. பொங்கலன்று வெளியாக வேண்டிய படம், திரையரங்குகள் கிடைக்காததால் தள்ளிப்போனது. குறிப்பாக விஜய்யின் தெறி படம் நேற்று மறுவெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவை சந்தித்து ரீ ரிலீசை தள்ளி வைக்க வேண்டும் என திரௌபதி 2 பட இயக்குநர் மோகன் ஜி கோரிக்கை வைத்தார். இதையடுத்து கலைப்புலி தாணுவும் ஒத்துக்கொண்டு, தெறி மறு வெளியீட்டை ஒத்திவைத்தார். ஆனால் நேற்று திரௌபதி 2 படத்துடன் மங்காத்தா மறு வெளியீடு செய்யப்பட்டது. இதனால் திரௌபதி 2 வசூல் பாதிக்கப்பட்டது. இது குறித்து இயக்குநர் மோகன் ஜி, #திரெளபதி2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல்…
சமூக வலைதளங்களில் பென்குயின் ஒன்று தனது கூட்டத்தை விட்டு வெளியேறும் வீடியோ வைரலாகி வரும் நிலையில் விஜய்யுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் அதகளப்படுத்தி வருகின்றனர். கடந்த 2007ஆம் ஆண்டு நிகிலிஸ்ட் என்ற பென்குயின் தனது கூட்டத்தை விட்டு 70 கிமீ தொலைவில் உள்ள மலைக்கு பயணம் செய்தது. மீண்டும் அதற்கு இரையை காட்டி திரும்ப செய்தாலும், அது மீண்டும் மீண்டும் மலைக்கு பயணம் செய்ய புறப்பட்டது. கூட்டத்தில் உள்ள மற்ற பென்குயின்களும், தடுத்து நிறுத்தினாலும் தனது இலக்கை நோக்கி அது பயணித்து கொண்டே இருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைளதளங்களில் வைரலாகி வரும் சூழலில் விஜய் ரசிகர்கள் அந்த பென்குயினே எங்கள் அண்ணன் விஜய் தான் மீம்ஸ் போட்டு வருகின்றனர். சினிமாவை விட்டு அரசியலில் குதித்துள்ள விஜய், கடினமான பயணத்தில் உள்ளார். சிபிஐ விசாரணை, ஜனநாயகன் ரிலீஸ் ஆகாமல் போனது, அரசியல் போட்டி என விஜய் சந்தித்து வரும் சிக்கல்கள் பல…
