Author: Prime Reporter

கேரள எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில், மது போதையில் மாணவிகளுடன் காரில் தாறுமாறாகச் சென்ற மாணவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் உள்ள கல்லூரிகளில் பயிலும் வெளிமாநில மாணவர்கள் வார இறுதி விடுமுறையைக் கழிக்கச் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள் அடங்கிய கும்பல் ஒன்று, மது போதையில் நிதானமின்றி காரில் கேரளா நோக்கிப் பயணம் செய்து உள்ளது. இதில் ஒரு மாணவர் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்து உள்ளது. குனியமுத்தூர் பகுதியில் கார் சென்று கொண்டு இருந்த போதே, சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதுவது போல் அதிவேகமாக தாறுமாறாக இயக்கி உள்ளனர். சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் கூச்சலிட்டு காரைத் தடுத்து நிறுத்த முயன்ற போதும், மாணவர்கள் எதற்கும் செவிசாய்க்காமல் மின்னல்…

Read More

மலையாளத்தில் வெளியான Falimy படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிதீஷ் சஹதேவ், தனது இரண்டாவது இயக்கமாக தமிழில் தலைவர் தம்பி தலைமையில் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், இளவரசு, தம்பி ராமையா மற்றும் பிரார்த்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் பிரதிபலனாக, வசூல் ரீதியாகவும் படம் கணிசமான முன்னேற்றத்தை காட்டியுள்ளது. தற்போது 9 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம், உலகளவில் இதுவரை ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சிறையில் இருந்து வெளியே வந்த கணவனை காத்திருந்து காரில் அழைத்து சென்று மனைவி செய்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. தெலங்கானாவில் பெத்தரவிடு பகுதியை சேர்ந்த லாலு சீனு என்பவர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். லாலு சீனு லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். மேலும் போதை பழக்கத்துக்கு அடையான அவர், கஞ்சா விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே லாலு சீனு மனைவி ஜான்சி, தனது தம்பியின் நண்பருடன் கள்ளக்காதலில் விழுந்தார். இந்த கள்ளக்காதல் சம்பவம் சிறையில் இருந்த கணவருக்கு தெரியவர, சிறைக்கு கணவனை பார்க்க சென்ற ஜான்சி மற்றும் அவரது தம்பியை வெளியே வந்தவுடன் உங்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த ஜான்சி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்த சதி திட்டம் தீட்டினார். குண்டூரை சேர்ந்த கூலிப்படையினரிடம் ரூ.2 லட்சத்துக்கு பேரம் பேசி முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். இதையடுத்து…

Read More

டாடா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கணேஷ் கே பாபு. டாடா படம் மூலம் நல்ல திறமையான இயக்குநராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் அடுத்து வெளியாகும் படம் கராத்தே பாபு. இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் சம்மந்தப்பட்ட திரைப்படம். இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் ரவி மோகன். இவருடன் நாசர், கேஎஸ் ரவிக்குமார், தவுதி எஸ் ஜிவால், காளி வெங்கட் உட்பட பலர் நடிக்க சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். கடந்த வருடம் பிரோமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் கராத்தே பாபு என்பது ஆளுங்கட்சி அமைச்சரான சேகர் பாபுவின் கதை என ஒரு பக்கம் பேச்சுகள் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் படக்குழு மறுத்தது. இன்று டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அதில் தொழிலுக்காக அரசியல் பண்ற. நான் அரசியலையே தொழிலா பண்றேன் என ரவி மோகன் பேசிய பஞ்ச் அனல் பறக்க விட்டுள்ளது.

Read More

கோவை, குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமப்புறங்களில் தொடர்ச்சியான பரப்புரை மேற்கொண்டு வருவதாக கூறினார். கடந்த 7ஆம் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் மாநாடு நடைபெற்றதாகவும், அந்த மாநாட்டில் 80 பேர் கொண்ட குழுவின் கருத்துகளின் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவுபடுத்தினார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அரசியல் சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, சில ஊடகங்களில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து தவறான செய்திகள் வெளியாகி வருவதாக குற்றம்சாட்டினார். 2026 சட்டமன்ற தேர்தலை புதிய தமிழகம் கட்சி கொள்கை ரீதியாக எதிர்கொள்ளும் என்றும்,…

Read More

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. அஜித் கேரியரில் மிகப்பெரிய வெற்றியும், திருப்புமுனையாக அமைந்த படம் இது. வெங்கட்பிரபு இயக்கத்தில், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் ரீ ரிலீசாகியது. பெரும் வரவேற்பை கொடுத்த அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் கொண்டாட, விஜய் ரசிகர்களும் மங்காத்தா ரீ ரிலீசை வரவேற்று பேனர் வைத்துள்ளனர். நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தியேட்டர் வளாகத்தில் தவெக நெல்லை வடக்கு மாவட்டம் சார்பில் மங்காத்தா படத்துக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்துள்ளனர். இதற்கு அஜித் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் பட்டாசு வெடித்தும், டிஜே ஒலித்து மங்காத்தா படத்தை நடனமாடி கொண்டாடினர்.

Read More

மதுரை எய்ம்ஸ் என்ற எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? துரோகங்களை மட்டுமே தொடர்ந்து செய்யும் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்? என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்? Delimitation-ல் தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு…

Read More

கோவையில் விசில் சின்னத்துடன் விசில் போடு தளபதிக்குத்தான் தமிழ்நாடு என த.வெ.க.வினர் ஒட்டியுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசியலில், தற்போது விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெரும் சக்தியாக உருவெடுத்து இந்திய அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் முதல் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில்,அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை அதிகர பூர்வமாக ஒதுக்கீடு செய்துள்ளது. இது த.வெ.க.வினர் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,கோவையில் பல்வேறு இடங்களில் விசில் சின்னத்துடன் த.வெ.க. கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக விசில் போடு தளபதிக்குத்தான் தமிழ்நாடு என ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் கவனம் ஈர்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இபிஎஸ் இணைந்ததால் தேஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார் டிடிவி தினகரன். தேர்தல் நேரம் நெருங்க நெருங்க, இன்று மீண்டும் தேஜ கூட்டணியில் இணைந்துள்ளார். அவரை மீண்டும் இணைய வைக்க பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் அண்ணாமலை. இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு நன்றி கூறியுள்ளார் அண்ணாமலை. அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்களின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இந்தியாவுக்கு வருகை புரிந்து விளையாடி வந்த நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. இதன் பிறகு ஆடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் தொடரை வென்றது நியூசிலாந்து அணி. ஆனால் இந்திய அணி சார்பாக விராட் கோலி தனியாக போராடி சதமடித்து விளாசினார். இருந்து அது வீணாகிப் போனது. இந்த நிலையில் இளம் வீரர்கள் விராட் கோலியின் மனநிலையை பின்பற்ற வேண்டும் என இந்திய அணி முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஒரு நாள் கிரிக்கெட்டின் GOAT விராட் கோலி. 52 சதங்களை அடித்து சச்சின் சாதனையை முறியடித்தது அவரை ஒரு தனி உயரத்தில் வைத்துள்ளது, அவர் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதுதான் வெற்றியின் ரகசியம். சில வீரர்கள் எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார், ஆனால் கோலி ரன் குவிப்பதிலையே…

Read More