Author: Prime Reporter
2016 முதல் 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பல நடிகர்கள், நடிகைகள், சிறந்த திரைப்படங்கள், சிறந்த கலைஞர்கள் தேர்வாகினர். விருது பட்டியலில் தனுஷ், விக்ரம்பிரபு, விஜய் சேதுபதி, கார்த்தி, பார்த்திபன், சூர்யா, ஆர்யா உள்ளிட்டோர் சிறந்த நடிகர்களாகவும், ஜோதிகா, நயன்தாரா, மஞ்சுவாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜூமோல், சாய் பல்லவி சிறந்த நடிகர்களாக தேர்வாகினர். விருது பட்டியல் குறித்து விவாதங்கள் பல எழுந்தன. விருதுக்கு தேர்வான கலைஞர்கள் பலர், தமிழக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். ஆனால் தேர்வாக திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், திரையுலகினர் பலர் ஆதங்கத்தை கொட்டியுள்ளனர். சமூகத்திற்காக நல்ல கதை சொன்ன படங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், விமர்சன ரீதியாக, கலை ரீதியாக பாராட்டை பெற்ற திரைப்படங்கள், கலைஞர்களுக்கு விருது கிடைக்காதது சரியா என்றும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், ராட்சசி திரைப்படத்தை விட கோமாளியும், பொன்மகள் வந்தாலும் தான் சிறந்த படமாக இருந்திருக்கிறது…
நேற்று முத்துக்குமர் நினைவு தின கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் உரை நிகழ்த்தும் போது, ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலியே மயங்கி கிடந்தவர்கள், பார்ப்பனர்களின் வேள்வி யாகங்களில் மயங்கி கிடந்தவர்கள் என கூறினார். மேலும் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னராக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை, உடன்பாடும் இல்லை என கூறியிருந்தார். இந்த நிலையில், திருமாவளவன் பேச்சுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவல், ஊழல் நிறைந்த, இந்து விரோத திமுக ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வுக்கும் தொடர்ந்து பாஜகவும் சங்கப் பரிவாரமும் காரணம் என குற்றம் சாட்டி வந்த I.N.D.I. கூட்டணி எம்.பி.…
தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 அல்லது 3 மாதங்களே உள்ளன. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் என 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் பம்பரம் போல தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தனியார் பிரபல ஆங்கில ஊடகத்தின் சார்பாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விவாத நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பங்கேற்றார். வழக்கம் போல காரசாரமாக பதில் சொல்லிக்கொண்டிருந்த ஹெச் ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. முதலுதவி கொடுத்தும் முன்னேற்றம் ஏற்படாததால் சென்னை அப்பல்லோ…
நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் மனதை கவர்ந்த விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்ற பெயரும் உண்டு. ஆரம்பத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்த விஜய் சேதுபதி, ஒரு வருடத்தில் அதிக படங்களில் நடித்து வந்தார். தற்போது கைவசம் ஏராளமான படங்கள் இருக்கும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது, காயமடைந்ததாகவும், தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி பூரண குணமடைய வேண்டும் என சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் பதிவுகளை போட்டு வருகின்றனர். விஜய் சேதுபதி காயமடைந்த தகவல் சமூக வலைதளங்களில் மட்டும்பரவி வருவதால் இது எந்தளவு உண்மையென தெரியவில்லை.
நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்த பொம்மை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது. சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்ட, இந்தியாவை பதைபதைக்க செய்த சம்பவத்தின் பதட்டமே இன்னும் ஓய்வுறாத நிலையில், இன்று மீண்டும் ஒரு பெண், அரசுக் கல்லூரியின் கேண்டினில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே, என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர் மா சுப்ரமணியன் அவர்கள். அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட. ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை…
சென்னை நந்தனத்தில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் ஆண், பெண் இருபாலரும் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகர் என்பவர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அதே உணவகத்தில் பணிபுரிந்த 22 வயது பெண்ணை, கல்லூரி வளாகத்திற்குள் வைத்து குணசேகர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், அந்த பெண்ணை இதே சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐந்து பேர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கண்ணீருடன் கல்லூரியில் பணியாற்றும் காவலாளியிடம் வேதனையுடன் தெரிவித்ததைத் தொடர்ந்து, உடனடியாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, குணசேகரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, நந்தனம் பகுதியில் நிகழ்ந்த கடுமையான குற்றச் சம்பவங்கள் தொடர்பான அதிர்வுகள் இன்னும்…
நடிகர் அஜித் குமார், திரைப்படங்களைத் தாண்டி கார் ரேஸிங் மீது கொண்டுள்ள ஆர்வத்தின் காரணமாக, அண்மைக் காலமாக பல்வேறு சர்வதேச ரேஸிங் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ஸ்பெயின் மற்றும் அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் கலந்துகொண்டு, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அபுதாபி ரேஸிங் களத்தில், திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் இசையமைப்பாளர்கள் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து, துபாய் ரேஸிங் களத்தில் நடிகர் மாதவன் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
கடந்த 2011ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியானது மங்காத்தா. அஜித், அர்ஜூன், திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அஜித் கேரியரில் மிகச்சிறந்த படமாகவும். முக்கிய திருப்புமுனையாகவும் இந்த படம் அமைந்திருந்தது. இதையடுத்த மங்காத்தா படம் கடந்த 23ஆம் தேதி 15 வருடங்களுக்கு பின் ரீ ரிலீசானது… படத்தை மிகவும் எதிர்பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ரீ ரிலீசில் மங்காத்தா படம் புதிய சாதனை படைத்துள்ளது. 6 நாட்களில் இதுவரை படம் ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
ஜனநாயகன் பட பிரச்சனையின் போது, விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுத்தது. ராகுல் காந்தி குரல் எழுப்பியது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சில முக்கிய தலைவர்களும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ் – தவெக இடையே கூட்டணி அமையும் சூழல் உருவானது. ஆனால் இன்று வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இது குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தை பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு படுத்தி, கூட்டணி குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கழகத்தின் நிலைப்பாடு மற்றும் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்…
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் ஒரு வாரத்தில் இணையும் என நேற்றுதான் கூறியிருந்தேன். அதற்கு இன்னும் ஏழு நாட்கள் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை டப்பா எஞ்சின் என முதலமைச்சர் கூறியுள்ளார். தேர்தலுக்குப் பின்பு எது மக்கரான என்ஜின் எது டப்பா எஞ்சின் எது வந்தே பாரத் இன்ஜின் என்பது அனைவருக்கும் தெரியும். திரைப்பட தணிக்கை குழு சுதந்திரமான அமைப்பு. ஜனநாயகம் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு மட்டும் தான் அதற்கு ஏன் தணிக்கை சான்றிதழ் தரவில்லை என்பது தெரியும். அந்த படத்திற்கு மட்டும் ஏன் அனைவரும் விளம்பரம் தேடுகிறார்கள் என்பது தெரியவில்லை. த.வெ.க ஆட்சி அமைத்தால் ஊழலற்ற ஆட்சியை தரும் என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு உங்களுக்கே இந்த கேள்வி நகைச்சுவையாக இல்லையா என பதில் அளித்தார்
