நடிகை சமந்தா, கடந்த 2025-ஆம் ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் உள்ள பைரவி தேவி சிலை முன்பு எளிமையாக இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தைத் தொடர்ந்து ராஜ் நிடிமோரு கதையில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ (தமிழில் ‘எங்கள் தங்கம்’) படத்தில் நடித்த அவர், அந்தப் படத்தின் வெற்றி விழாவில்தான் தான் தாயாகப்போகும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
தினம் தினம் டென்ஷன்.. இரவு பகலாக அதிகாரிகளிடம் விசாரிக்கும் முதல்வர் விஜய்..!
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்கள் மற்றும் செல்ஃபிளுடன், காருக்குள் முகத்தை மூடியபடி அழுதுகொண்டு இருப்பது போன்ற ஒரு வீடியோவை சமந்தா பகிர்ந்துள்ளார். ஆனந்த கண்ணீரா, சிரிப்பை அடக்க முடியாமல் செய்வதா அல்லது சோகமா என்று புரியாமல் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

