பண்டிகை காலங்களில் அனைவரின் விருப்பமான பாரம்பரிய இனிப்பான பாதுஷாவை, கடைகளில் வாங்குவது போல எப்படி மிகச் சுவையாகவும், உள்ளே ஜூசியாகவும் செய்வது என்பதற்கான எளிய செய்முறை விளக்கங்கள்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு, நெய் அல்லது டால்டா, தயிர், பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை பாகு
செய்முறை
தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களில் நம் வீடுகளில் செய்யப்படக்கூடிய பாரம்பரிய இனிப்புகளில் பாதுஷாவுக்கு எப்போதும் தனி இடமுண்டு. வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே சர்க்கரை பாகை உறிஞ்சி வாயில் வைத்ததும் கரையும் பக்குவத்திலுமான பாதுஷாவை நம் வீட்டிலேயே மிக எளிமையாகச் செய்வது எப்படி என்பது குறித்து இங்குப் பார்ப்போம்.
நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!
பாதுஷா செய்வதற்குச் சரியான அளவில் மைதா மாவு, நெய் மற்றும் தயிர் சேர்த்துப் பிசைந்து, மாவைச் சரியான பதத்தில் ஊற வைப்பது மிகவும் அவசியமாகும். பின்னர் அவற்றைச் சிறிய உருண்டைகளாக மாற்றி நடுவில் சிறிய அழுத்தம் கொடுத்து மிதமான சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.
இதற்கிடையே, ஏலக்காய் வாசனை கலந்த மிதமான சர்க்கரை பாகைத் தயார் செய்து, பொரித்தெடுத்த பாதுஷாவை அதில் ஊறவைத்து எடுத்தால், சுவையான மற்றும் பாரம்பரியமான பாதுஷா ரெடி!

