கேரளாவின் புகழ்பெற்ற ஓணம் பண்டிகையின் போது பரிமாறப்படும் ‘சத்யா’ (Sadya) விருந்தில் இடம்பெறும் மிக முக்கியமான மற்றும் பாரம்பரியமான ஒரு உணவு வகையாக ‘ஓலன்’ விளங்குகிறது.
தேவையான பொருட்கள்
- வெள்ளை பூசணிக்காய் (White Pumpkin),
- காராமணி (Black-eyed peas),
- திக்கான மற்றும் இரண்டாம் பால் தேங்காய்ப்பால் (Coconut milk),
- பச்சை மிளகாய்,
- கறிவேப்பிலை
உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!
செய்முறை
பூசணிக்காயை நறுக்கி வேகவைத்து, அதனுடன் வேகவைத்த காராமணி மற்றும் இரண்டாவது தேங்காய்ப்பாலைச் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு, இறுதியாக கெட்டியான முதலாம் தேங்காய்ப்பால் மற்றும் பச்சையாகச் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான ஓலன் தயார்.

