வனஸ்பத்தியில் நிறைவுற்ற கொழுப்புகளும் (Saturated Fats) மற்றும் உடல் ஆரோக்கியத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்புகளும் (Trans Fats) அதிகளவில் நிறைந்துள்ளன. வனஸ்பதியைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் (LDL) அளவை அதிகரித்து, மாரடைப்பு (Heart Attack) மற்றும் இதய நாள நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை பலமடங்கு உயர்த்துகிறது.
இது உடலில் எளிதில் கரையா கெட்ட கொழுப்பைச் சேர்ப்பதால், உடல் பருமன் (Obesity), சர்க்கரை நோய் (Diabetes) மற்றும் கல்லீரலில் கொழுப்பு சேரும் பிரச்சனைகள் (Fatty Liver) போன்ற தீவிர உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. தாவர எண்ணெய்களை திடப்படுத்த ஹைட்ரஜனேற்றம் (Hydrogenation) செய்யும் போது உருவாகும் டிரான்ஸ் கொழுப்புகள், உடலில் நல்ல கொழுப்பின் (HDL) அளவைக் குறைத்து, நச்சுத்தன்மை வாய்ந்த கெட்ட கொழுப்பை பலமடங்கு அதிகரிக்கின்றன.
இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை.. காற்றழுத்தத் தாழ்வுப் பாதை எதிரொலி..!
வனஸ்பதியில் தயாரிக்கப்படும் உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாது. மேலும், இது இரத்த நாளங்களில் கொழுப்புப் படலங்களை (Plaque) ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தைத் தடை செய்து பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. தொடர்ந்து டால்டா கலந்த உணவுகளை உட்கொள்வது உடலில் இன்சுலின் சுரப்பில் தடையை ஏற்படுத்தி, நீரிழிவு நோய் (Type 2 Diabetes) மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளில் பாதிப்புகளை உருவாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

