தேவையான பொருட்கள்
- அரிசி மாவு: 1 கப் (இடியாப்ப மாவு அல்லது பச்சரிசி மாவு)
- தண்ணீர்: 2 கப்
- தாளிக்க: எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
- மணமூட்டிகள்: பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் – 2, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு
- தேங்காய்: துருவிய தேங்காய் – 1/4 கப்
- உப்பு: தேவையான அளவு
செய்முறை
Step 1: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய மிளகாய், கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
Step 2: தாளித்தவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். பின்னர் துருவிய தேங்காயைச் சேர்க்கவும்.
Step 3: தண்ணீர் கொதித்ததும் தீயை மிதமாக்கி, அரிசி மாவைச் சிறிது சிறிதாகக் கட்டிகள் இல்லாமல் தூவி நன்றாகக் கிளறவும். மாவு வெந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும்.
தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!
Step 4: மாவு சூடு ஆறியதும், கையில் லேசாகத் தண்ணீர் அல்லது எண்ணெய் தடவிக்கொண்டு, சிறிதளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பிடித்து ‘பிடி’ வடிவம் கொடுக்கவும்.
Step 5: தயாரித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து, மிதமான தீயில் 10 முதல் 12 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

