பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்கள் நான்கு நபர்களை கைது செய்து பேரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தலைமறைவாக உள்ள மூன்று இருசக்கர வாகனங்களின் எண்களை வைத்து அதன் முகவரியை கண்டுபிடித்து விசாரணை செய்து வருகின்றோம். மேலும் கைது செய்யப்பட்ட இந்த நான்கு நபர்களும் படிக்கும் கல்லூரியில் இவர்களுக்கு டிசி வழங்க ஆவணம் செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!
தினமும் தொடர்ந்து மேற்கு புறவழிச் சாலையை பேரூர் காவல் நிலைய போலீசார் ரோந்து புரிந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் இனிவரும் காலங்களிலும் இது தொடரும் பட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுடைய உரிமை ரத்து செய்யப்பட்டு கல்லூரி மாணவராக இருப்பின் கல்லூரியில் டிசி கொடுக்க ஆவணம் செய்து அறிக்கை அனுப்பப்படும் என எச்சரித்துள்ளனர்.

