தமிழ் சினிமா உலகத்தில் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸை குறிவைத்து களமிறங்கத் தயாராகிவிட்டது ‘ஜெயிலர் 2’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, அக்டோபர் 15-ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடலுக்கான செம ஜாலியான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘கோலமாவு கோகிலா’ படத்திலிருந்தே தொடரும் நெல்சன் மற்றும் அனிருத்தின் ஹிட் காம்போ, இந்த ப்ரோமோவிலும் வழக்கம் போல ரசிகர்களைச் சிரிக்க வைத்துள்ளது. ஸ்டூடியோவில் அனிருத்தின் வெளிநாட்டு டூர்கள், பாஸ்போர்ட் விவகாரம் மற்றும் இசையமைப்பதில் நடக்கும் சின்னச் சின்னக் கலாய்ப்புகள் என இந்தப் ப்ரோமோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. “இன்னைக்கும் என்னைக்கும் ஒரு தலைவன் தான்” என்ற ஹூகும் ஸ்டைல் வைப் உடன், “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” என்ற செகண்ட் சிங்கிள் பாடல் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!
இதனிடையே, தலைவர் படம் வரும் வழியில் எந்தப் படமும் நிற்க முடியாது என்பது போல, ஆயுத பூஜை ரிலீஸாக இருந்த தனுஷின் படமும் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன் எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Wakeup Rajination! ⭐#Jailer2 Second Single #OneSunOneMoon releasing from September 25 🔥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @soupersubu @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh… pic.twitter.com/dz7AORkRQ1
— Sun Pictures (@sunpictures) September 23, 2026

