தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்து, பின்னர் ஆந்திர அரசியலில் தீவிரமாகக் களமிறங்கி அமைச்சராகப் பணியாற்றிய நடிகை ரோஜா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் முதல்வர் விஜய் குறித்துப் பேசியுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. சினிமாவில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட விஜய்யை, அரசியலில் இந்த அளவுக்கு ஒரு மக்கள் தலைவராகத் தாம் எதிர்பார்க்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
சினிமாவில் கதாநாயகனாக மக்களைக் காப்பாற்றிய பிம்பமே நிஜத்திலும் அவருக்குப் கை கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட ரோஜா, “விஜய் அரசியலில் குதித்த உடனே முதலமைச்சராகிவிட்டதற்கு அவரது அதிர்ஷ்டம் மட்டுமே முக்கியக் காரணம்” எனத் திறந்த மனதுடன் விமர்சித்துள்ளார். சொல்லப்போனால், சில பாதுகாப்பு மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக முழுமையான தொகுதிகளுக்குச் சென்று அவரால் பிரச்சாரம் செய்ய இயலாத நிலையிலும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே அவரை அரியணையில் அமரச் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!
இதற்கிடையே, தமிழகத்தைத் தாண்டி தவெக கட்சியைப் புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ரோஜா, தனது அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தாம் பட்ட அனுபவங்களை முன்வைத்து, பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் கட்சியைத் தொடங்க முற்பட்டால் எங்குமே நிலையான காலூன்ற முடியாது என்றும், ஒரு குறிப்பிட்ட இலக்கில் கவனத்தைச் செலுத்துவதே சிறந்தது என்றும் அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்துள்ள விஜய் குறித்த நடிகை ரோஜாவின் இந்தப் பேட்டி, தற்போது அரசியல் வட்டாரத்திலும் சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

