Close Menu
    What's Hot

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!
    கோவை

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 23, 2026Updated:September 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-airport-gold-smuggling-arrest-singapore-flight-customs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரச் சோதனை: சென்னை புழல் மற்றும் கோவைச் சிறையில் அடைப்பு.சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த இரு பயணிகள், தங்களது உள்ளாடைகளுக்குள் மறைத்து எடுத்து வந்த ரூ.2.47 கோடி மதிப்பிலான தங்கத்தை மீட்டுச் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் (Scoot Airlines) சர்வதேச விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானப் பயணிகளை, மத்திய சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு தீவிரமாகக் கண்காணித்துச் சோதனை செய்தனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்ட சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேசவன் என்பவரை அதிகாரிகள் தனியறைக்கு அழைத்துச் சென்று முழுமையாகச் பரிசோதித்தனர்.

    அதில், அவர் தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்த 835 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைக் கண்டறிந்த அதிகாரிகள் அதனைப் பறிமுதல் செய்தனர்.இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1 கோடியே 31 லட்சத்து 93 ஆயிரம் ஆகும்.இதனைத் தொடர்ந்து, அதே விமானத்தில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் வேலம்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் ரங்கசாமி என்பவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரச் சோதனை மேற்கொண்டனர்.

    அவரும் தனது உள்ளாடைக்குள் 736 கிராம் எடை உள்ள தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டித் துண்டுகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 16 லட்சத்து 28 ஆயிரம் ஆகும்.​இதன் மூலம் இருவரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1,571 கிராம் ஆகும். இதன் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 48 லக்‌ஷம் (ரூ.2.47 கோடி) என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இருவரையும் உடனடியாகக் கைது செய்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி, வெளிநாட்டவரான கேசவன் சென்னை புழல் சிறையிலும், தஞ்சாவூரைச் சேர்ந்த வீரப்பன் ரங்கசாமி கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் இருவரும் யாருக்காகத் தங்கத்தைக் கடத்தி வந்தார்கள்? பின்னணியில் இயங்கும் சர்வதேசத் தங்கக் கடத்தல் கும்பல் எது? என்பது குறித்துச் சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Coimbatore airport gold smuggling arrest Singapore Coimbatore airport gold smuggling Singapore flight Customs officers seize gold Coimbatore 2026 Customs seize gold innerwear Coimbatore Kesavan Veerappan gold arrest Puzhal Coimbatore jail கோவை விமான நிலையம் தங்க கடத்தல் சிங்கப்பூர் விமானம் தங்கம் பறிமுதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Don't Miss

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.