தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த பிரபலக் குடும்பச் சகோதரிகளான ராதா மற்றும் அம்பிகா இடையே வெடித்துள்ள பணமோசடி விவகாரம், தற்போது சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் தீயாகப் பரவி வருகிறது. தனது பழைய காசோலைகளைத் தவறாகப் பயன்படுத்தி சுமார் 43.62 கோடி ரூபாய் பெற முயன்றதாக நடிகை ராதா தன் சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பகிரங்கமாகப் புகார் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் பரபரப்பான சூழலில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை அம்பிகா வெளிப்படையாகப் பேட்டி அளித்துள்ளார்.
தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான ‘ARS Garden’ சொத்து உருவாவதற்குத் தாமே முக்கியக் காரணம் என்று கூறியுள்ள அம்பிகா, அத்தொகுதியின் பெயர் மாற்றப்பட்டதைப் பார்த்துத் தாம் மனதளவில் உடைந்துபோனதாக வேதனை தெரிவித்தார். தாங்கள் இணைந்து கஷ்டப்பட்டுச் சம்பாதித்த சொத்துகளிலும், அதிலுள்ள புரொடக்ஷன் கம்பெனி பங்கிகளிலும் தமக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமக்குத் தர வேண்டிய நகைகள் மற்றும் மூன்று காசோலைகள் குறித்துக் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் தங்களைத் தொடர்புகொள்ள விடாமல் தடுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!
செக் கொடுத்ததும் தாங்கள்தான், பின்னர் அதனைத் திடீரெனத் தடை செய்ததும் அவர்கள்தான் என்று விளக்கமளித்த அம்பிகா, இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கவே தாம் இவ்வளவு காலம் அமைதியாக இருந்ததாகவும், ஆனால் தன் மீதே பொய்யான புகார்கள் சுமத்தப்படுவதைக் கண்டு மனம் புழுங்குவதாகவும் கண்கலங்கிக் கூறியுள்ளார். இரத்த உறவுகளுக்கு இடையே சொத்து மற்றும் பணம் காரணமாக உருவாகியுள்ள இந்தச் சட்டப் போராட்டம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

