Browsing: கோவை
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த திருச்சியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களின் உடல்கள் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கோவை மாவூத்தம்பதி அருகே காட்டு யானை தாக்கியதில் 72 வயது விவசாயி நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை நல்லமுடி காட்சி முனையில் சுற்றுலாப் பயணிகளிடம் 50 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கும் வனத்துறை, அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில்லை எனப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆம்புலன்ஸ் என்றாலே உயிர்காக்கும் வாகனம் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில், ஆம்புலன்ஸைப் பயன்படுத்தி கஞ்சா கடத்திய இருவரை கோவை மாநகர காவல்துறை கைது செய்துள்ளது.
கோவை வெள்ளானைப்பட்டியில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பாட்டில்கள், நாற்காலிகளைக் கொண்டு தாக்கித் தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து நீலாம்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் ஜி.டி மேம்பாலத்தில் ஓடும் காரின் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் 4 இளம்பெண்கள் அமர்ந்து பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் எலிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.
கோவையில் மறைந்த நடிகர் பாக்யராஜின் நினைவாக, 150-க்கும் மேற்பட்டோர் கண் தானம் வழங்க முன்வந்துள்ளனர். மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது.
முதலமைச்சர் விஜய் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய விஷ்ணு பிரசாத், மனோஜ் குமார் ஆகிய இருவரை மதுக்கரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கோவை சூலூரில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
