Browsing: கோவை
கோவையில் நீட் தேர்வு குளறுபடிகளால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் 19 வயது மாணவி அனுகீர்த்தனா வாட்ஸ்-அப்பில் உருக்கமான செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவையில் 3.55 ஏக்கர் பரப்பளவு கொண்ட தேகனி ஏரியைப் புனரமைக்கும் பணி மற்றும் 10,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கோவை துடியலூர் அருகே நேதாஜி நகர் சாலையில் 6 அடி நீளமுள்ள இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேட்டுப்பாளையம் வணிக வளாகம் மற்றும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த புள்ளிமான்களை வனத்துறையினர் மீட்டு மீண்டும் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்பியுள்ளனர்.
அதிமுக மூத்த நிர்வாகி செ.ம.வேலுச்சாமியின் மாமியார் ரங்கம்மாள் மறைவுக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்.
கோவையில் இந்தியன் வங்கி நடத்திய மெகா கடன் முகாமில் சில்லரை, விவசாயம் மற்றும் MSME துறைகளுக்கு ரூ.1,300 கோடி கடனுதவி அப்ரூவல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை கோவில்பாளையத்தில் கல்லூரி மாணவியை இன்ஸ்டாகிராமில் ஏமாற்றி, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற இரு வாலிபர்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் உதகை சாலையில் காட்டு யானை பாகுபலி கடைக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தியது; ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் வனத்துறையினர் யானையை விரட்டினர்.
கோவை சூலூர் அருகே சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியைக் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோவில் கைது செய்தனர்.
கோவை மணியக்காரன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
