தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த டிசம்பர் மாதம் கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தாக்கல் செய்த இந்த விவாகரத்து மனுவில், திருமண உறவை ரத்து செய்வதுடன் ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரை இல்லத்தில் வசிக்கும் உரிமை கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து தொடர்பான வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், எவ்வித முடிவும் எட்டப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!
இந்த வழக்கில், இரு தரப்பினரும் வீடியோ காட்சி (Video Appearance) மூலம் ஆஜராகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட விசாரணை எப்போது நடைபெறும் என்பது குறித்த முறையான தேதிகள் அறிவிக்கப்படாமல், வழக்கு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

