Author: Prime Reporter

ரத்தினபுரியில் ஜவுளி வியாபாரியை மிரட்டி மாமுல் பறித்த வாலிபர் கைது கத்தி, பைக் பறிமுதல் ரத்தினபுரி பகுதியில் ஜவுளி வியாபாரியை கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவானந்தா காலனி, டாடாபாத் முதல் தெருவைச் சேர்ந்த லோகேஸ்வரன் ஆட்டோவில் சென்று ஜவுளிகள் விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று, 100 அடி ரோடு, ராஜு நாயுடு தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். “இந்த ஏரியா ரவுடி நான், எனக்கு பல வழக்குகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் மாமுல் தர வேண்டும்” என கூறி மிரட்டி, லோகேஸ்வரனின் சட்டைப் பாக்கெட்டிலிருந்த ரூ.2,000 பணத்தை பறித்துள்ளார். இதனால் லோகேஸ்வரன் சத்தமிட்டதும், பொதுமக்கள் திரண்டனர். அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தப்பிச் சென்றார். இதுகுறித்து லோகேஸ்வரன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த…

Read More

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல். மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று டிஆர்பி ரேட்டில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்து வருகிறது. அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாசமும், திருமணம் செய்வது போல் நடித்து நிஜ மருமகளாக நுழைந்த நிலாவுக்கும் நடக்கும் கதையே இந்த அய்யனார் துணை சீரியல். ஆண்கள் மட்டுமே உள்ள வீட்டில் நுழைந்த நிலா, எப்படி அந்த வீட்டையும், அவர்களின் மனதை மாற்றுகிறார் என்பதே கதை. இடையில் கணவரின் அண்ணன் காதல், தம்பியின் காதல் என ஜாலியாக செல்கிறது இந்த சீரியல். இதில் கணவன் சோழன் மீது ஆசைப்படும் கல்லூரி மாணவியாக வருகிறார் காயத்ரி. கணவரை கண்டுகொள்ளாத நிலாவை காயத்ரியை வைத்து காய் நகர்த்தும் சோழன். இப்படி கதை நகர்ந்து கொண்டு இருக்க, காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆயிஷா, அதே சீரியலில் நடிக்கும் சல்மானுடன் காதல் வயப்பட்டுள்ளார். இருவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.…

Read More

திண்டுக்கல் திமுக கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஐ பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ஆட்சியில் பங்கு இல்லை என்பது அமைச்சர் ஐ பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு, ஆட்சியில் பங்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். யார் எது வேண்டுமானாலும் கேட்கலாம். முடிவு முதலமைச்சர் கையில் உள்ளது. பொங்கல் பரிசு தொகை கொடுப்பதால் விவசாயத்திற்கு புதிய கடன் வழங்க முடியாது அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு? அண்ணாமலை அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.நிதி நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியைப் போல் குளறுபடி கிடையாது. அனைத்து திட்டங்கள் மூலமும் அரசின் வருவாய் உயர்த்தி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். நிதி…

Read More

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். அதிமுக தற்போது வேட்பாளர் தேர்வு செய்து விருப்ப மனு வாங்கி, நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ராஜபாளையம் தொகுதியை கேட்டு விருப்பமனு அளித்துள்ளார் நடிகை கவுதமி. விருப்பமனு அளித்து இபிஎஸ் உடன் நேர்காணலில் சந்தித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராஜபாளையம் தொகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக மக்களோடு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளோடு நெருக்கமாகவே பயணித்து வருகிறேன். அந்த நம்பிக்கையில்தான் அங்கு போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளேன். வெற்றியில் எந்த சந்தேகமும் இல்லை” என திடமான நம்பிக்கையுடன் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அரசியலுக்கு யாரும் வரலாம். ஆனால் அதிமுக வாக்கு வங்கியை விஜய் ஒருபோதும் கைப்பற்ற முடியாது” என்று கடுமையாக பதிலளித்தார். விஜயின் அரசியல் பயணம் இன்னும்…

Read More

தென்னிந்தியாவில் பொங்கல், சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான புதிய படங்கள் அந்தந்த மொழிகளில் வெளியாகி உள்ளன. அந்த வகையில் தெலுங்கில் வெளியான படம் தான் மான ஷங்கரா வரப் பிரசாத் காரு. சிரஞ்சீவி, வெங்கடேஷ், நயன்தாரா, கேத்தரின் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானி இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு தியேட்டரில் டிக்கெட் எடுத்து பார்த்தனர். ஐதராபாத்தில் உள்ள Kukatpally என்ற பகுதியில் உள்ள அர்ஜூன் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர் திடீரென உயிரிழந்துள்ளார். ஆனந்தகுமார் என்ற அந்த நபர்,தியேட்டரில் படம் பார்த்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிர்காக்கும் மருத்துவமனைகளைக் கூட மக்களுக்கு பாதுகாப்பில்லாத கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண்மணியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக இன்று அதிகாலை மருத்துவமனைக்கு வந்த ஆதி என்ற இளைஞரை, தலைக்கவசம் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் மகப்பேறு பிரிவுக்குள் புகுந்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது. இந்தக் கொலையை செய்த கூலிப்படையினரை காவல்துறையினரால் இது வரை கைது செய்ய முடியவில்லை. கொலை செய்யப்பட்ட ஆதி மீது கொலை வழக்கு உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பின்னணி கொண்டவர்கள் 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வைக்கப்பட்டிருந்தால் அவர் கூலிப்படையினரால்…

Read More

கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீடு புகுந்து பெண்ணையும் அவரது தந்தையையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 5 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் முத்து கருப்பு என்பவரின் மனைவி ரிஃபானா (24). கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு, புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஸ்பீக்கர் வாங்க முடிவு செய்த ரிஃபானா, அதற்காக தனது தோழியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சபிக் மற்றும் ரியாஸ் ஆகியோர் அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரிஃபானா வீடு திரும்பியுள்ளார்.இதனைத் தொடர்ந்து சபிக், ரியாஸ் மற்றும் அவர்களது நண்பர்கள் ஹரி, பாசில், வெற்றி ஆகியோர் ரிஃபானாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றியதில், ஐந்து பேரும் ரிஃபானாவையும் அவரது தந்தையையும் தாக்கியதாக…

Read More

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் அவரின் கடைசி படம் என கூறப்படுகிறது. அரசியலில் குதித்துள்ளதால் அவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசி படம் என்பதால் மாஸ் வரவேற்பை கொடுக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி 9ஆம் தேதி வெளியாகவில்லை. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் பெரும் பிரச்சனையை சந்தித்து வருகிறது படக்குழு. ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை. உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி பிடி ஆஷா, படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதை எதிர்த்து தணிக்கை வாரியம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது விசாரணயில், இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி பிடி ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர். இதனால் ஜனநாயகன் மீண்டும் தள்ளிப்போனது. இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளதால்…

Read More

கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசார், குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் பதுங்கியிருந்த 10 சைபர் மோசடி நபர்களை கைது செய்து, ரூ.16.49 லட்சம் மதிப்புள்ள ஆன்லைன் மோசடி வழக்கை முறியடித்துள்ளனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 71 வயதான சாமுவேல் சந்திரபோஸ் என்பவருக்கு, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி RTO CHALLAN அபராதம் செலுத்த வேண்டும் எனக் கூறி ஒரு APK அப்ளிகேஷன் வாட்ஸ்ஆப்பில் வந்துள்ளது. அதை உண்மை என நம்பிய அவர் அந்த ஆப்பை தனது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு செயல்பட முடியாத நிலையில் மாறியுள்ளது. அடுத்த நாளில் தொடர்ந்து OTPகள் வந்த நிலையில், அவரது IndusInd வங்கிக் கணக்கில் வைத்திருந்த Fixed Deposit தொகை எடுத்துக்கொள்ளப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. வங்கியை அணுகி சரிபார்த்தபோது, ரூ.16,49,961 ஆன்லைன் மூலம் மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவை மாநகர…

Read More

தமிழ் சினிமாவின் உச்சநடிகராக உள்ள விஜய் தீவிர அரசியலில் குதித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த நிலையில் இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இன்று டெல்லியில் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார் விஜய். இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், விஜய் குறித்து சரமாரி விமர்சனம் செய்துள்ளார். அரசியலில் இன்னும் LKG பயிலும் நிலைமையில் உள்ள நடிகர் விஜய், பனையூரின் வரம்புகளைத் தாண்டி பரந்த அரசியல் வெளியில் கால்பதிக்க வேண்டியுள்ளது. அரசியல் என்பது மேடைகளில் உரையாற்றுவதற்கான இடமல்ல; மக்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளில் திடமான நிலைப்பாடு எடுக்க வேண்டிய தளம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இதுவரை ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை. அதேபோல், மத்திய அரசு தமிழகத்திற்கான கல்வி நிதியாக…

Read More