Author: Prime Reporter
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியானது பராசக்தி. ஜிவி இசையமைப்பில் பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், தணிக்கை சான்றிதழ் பெற தாமதாமானாலும் இறுதியில் திட்டமிட்டபடி வெளியானது. இந்த நிலையில் முதல் நாளான இன்று பல பிரபலங்கள் படத்தை காண தியேட்டரில் குவிந்தனர். சிவகார்த்தகியேன், ஸ்ரீலீலா, சுதா கொங்கரா, கெனிஷா உள்ளிட்ட பிரபலங்களும் படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்தனர். படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும், ஒரு சிலர் நெகட்டிவ் கருத்துக்களை வைத்துள்ளதால் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது. இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகை ஷாலினி அஜித்குமார், படம் நன்றாக வந்துள்ளது. நான் என்ஜாய் செய்தேன் என கூறியுள்ளார்.
இளம் வயதிலேயே சின்னத்திரை தொகுப்பாளினியாக வலம் வந்த டிடி பலரது ரசிகர்களை கவர்ந்தார். சிறு சிறு படங்களில் நடித்த அவர், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். எத்தனை தொகுப்பாளர்கள் வந்தாலும் டிடிக்கு என்று தனி சிறப்பு தான். தற்போதெல்லாம் அரசியல் நிகழ்ச்சிகளில் இவரை காண முடிகிறது. பொது வாழ்க்கையில் பிரபலமான டிடியின் தனிப்பட்ட வாழ்க்கை கொஞ்சம் கசப்பானதுதான். முதல் திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே கணவரை பிரிந்த அவர் தற்போது வரை திருமணம் செய்யாமல் இருக்கிறார். அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் டிடி, தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். View this post on Instagram A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) திருமண புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளதால் உடனே டிரெண்டானது. யாருக்கு திருமணம் என்று பார்த்தால் அவருடைய சகோதரர் தர்ஷனுக்கு நடந்துள்ளது. வெளிநாட்டு பெண்ணான அஜர் என்பவரும் அவரது…
கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் திருக்கோவிலில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நைனார் நாகேந்திரன், முகலாயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பெருவாரியான இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டதாக கூறினார். முகமது கஜினி 17 முறை படையெடுத்து கோவில்களில் உள்ள செல்வங்களை கொள்ளையடித்து சென்றதாகவும் தெரிவித்தார். வரக்கூடிய தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டதாக கூறிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் எடப்பாடி பழனிசாமி முதல்வரானால் அமைச்சர்கள் யார் என்பது குறித்து தேர்தல் முடிவுகளே பதில் அளிக்கும் என்றார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக இரட்டை இலக்க எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கும் என நம்பிக்கை தெரிவித்த நைனார் நாகேந்திரன், எத்தனை…
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.80க்குட்பட்ட உக்கடம் கெம்பட்டி காலனி, ஒக்கிலியர் காலனி 7வது வீதி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார் இன்று (10.012026) துவக்கி வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். நோயின்றி நலமுடன் வாழ குழந்தைகள், முதியோர்கள். பெண்கள் என பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். அதில் குறிப்பாக, மருத்துவ காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம். இன்னுயில் காக்கும் 48 என்ற சாலை விபத்திற்கான சிறப்பு திட்டம். முதலமைச்சரின் விரிவாக காப்பீட்டு திட்டம். இதயம் காப்போம். சிறுநீரகம் காப்போம் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், பாதம் காப்போம்…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் அவரின் கடைசி படம் என கூறப்படுகிறது. அரசியலில் குதித்துள்ளதால் அவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசி படம் என்பதால் மாஸ் வரவேற்பை கொடுக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி 9ஆம் தேதியான நேற்று வெளியாகவில்லை. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் பெரும் பிரச்சனையை சந்தித்து வருகிறது படக்குழு. ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை. நீதிமன்றமும் படத்தை வெளியிட தடை விதித்துள்ளதால், தணிக்கை வாரியத்தின் வாதம் பொறுத்தே வரும் திங்கட்கிழமை முடிவு தெரியவரும் என கூறப்படுகிறது இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான கே வெங்கட்நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிசம்பர் மாதமே படத்த தணிக்கை குழுவுக்கு அனுப்பி அவர்கள் சொன்ன திருத்தங்களை செய்து மீண்டும் சமர்பித்தோம். யுஏ சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பட வேலைகளை பார்த்து கொண்டிருந்த போது…
கோவை சாய்பாபா காலனி பகுதியில், தனியார் மகளிர் கல்லூரியில் பாஜக வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வானதி சீனிவாசன் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் முழக்கங்களை ஏந்தி நடைபயணம் மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், சுற்றுப்புற சூழல், கார்பன் நியூட்டலுக்காக இன்று வாக்கத்தான் நடைபெற்றது என்றார். கார்பன் நியூட்டன் கோவைக்கு வெர்ச்சுவல் மரம் நடவு எனப்படும் செல்போனை குறிப்பிட்ட நேரம் சுவிட்ச் ஆப் செய்து கார்பன் அளவை குறைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் 92 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் இணைந்ததாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் சுற்றுப்புற சூழல்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 களைகட்டி வருகிறது. 95 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசனில் இந்த முறை 6 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் உள்ளனர். இன்னும் 5 நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வரப் போகிறது. இதில் கானா வினோத் தான் வெற்றியாளர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில், பணப் பெட்டி டாஸ்க்கில் கானா வினோத் வெளியேறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. இறுதியாக உள்ள சபரி, அரோரா, விக்ரம், சாண்ட்ரா, திவ்யா என 5 பேரில் யார் வெற்றியாளர் என்பதை காண இன்றும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். கானா வினோத்துக்கு அதிக ஆதரவு இருந்தும் அவர் ஏன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டார் என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆனால் பொருளாதார ரீதியாக சபரி மற்றும் சாண்ட்ரா உள்ளதால், வினோத் இவ்வாறு செய்திருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். கானா வினோத் எடுத்து சென்ற பணம் ரூ.18…
திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் ஏசுதாஸ்(45).இவர் மீது 2024 ஆம் ஆண்டு மாயாண்டி ஜோசப் என்பவரை கொலை செய்த வழக்கை முதல் குற்றாவவாளியாக தொடர்புடைய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏசுதாஸ் பிணையில் வெளியே வந்த நிலையில் காரில் வந்த மர்ம நபர்கள் காரில் நத்தம் சாலையில் RMTC நகர் அருகே ஏசுதாஸ் வெட்டிவிட்டு தப்பித்து சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரண மேற்கொண்டு இருந்தபோது ஏசுதாஸ் இரண்டாவது மனைவியான தீபிகா என்பவரை வீட்டின் முன்வைத்து கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பித்து சென்றுள்ளனர். உடனடியாக போலீசார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் கணவன் மனைவியை மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த இரண்டு கொலைகளை செய்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விஜய் சினிமா கேரியரில் கடைசி படம் என கூறப்படும் ஜனநாயகன் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக இருந்தது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் படம் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. குறிப்பாக நீதிமன்றத்தில் ஜனநாயகன் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று நடந்த விசாரணையில் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் தனி நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். இதையடுத்து ஜனநாயகன் படம் வரும் 11 அல்லது 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்ததால் படம் வெளியாவதில் தொடர்ந்து தடை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. நாளை உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாக உள்ள நிலையில் இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருபெரிய…
TTV தினகரனுக்கும் இடமில்லை – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கே தாங்கள்தான் தலைமை வகிப்பதாகவும், வருங்காலத்திலும் அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றும் உறுதியாகக் கூறினார். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது அமைக்கப்படும் ஒன்றே என்றும், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் திமுகவும் ஒரு காலத்தில் இருந்ததாகவும், அதேபோல் அதிமுகவும் இருந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி நினைவூட்டினார். மேலும், மிசா சட்டத்தின் கீழ் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைத்த காங்கிரஸ் கட்சியுடன்தான் திமுக தற்போது கூட்டணி வைத்துள்ளது என்றும் அவர் விமர்சித்தார். எனவே குறை சொல்லுவதற்கு எந்த காரணமும் இல்லாத நிலையில், ஏதாவது காரணத்தை தேடி முதலமைச்சர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.அதிமுக ஆட்சி குறை சொல்ல முடியாத, சிறப்பான ஆட்சி என குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியில் ஏதேனும் குறை…
