Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»எம்ஜிஆர் பற்றி பேசியது தப்புதான்… மன்னிச்சிருங்க… பிரபல நடிகர் வீடியோ!
    சினிமா

    எம்ஜிஆர் பற்றி பேசியது தப்புதான்… மன்னிச்சிருங்க… பிரபல நடிகர் வீடியோ!

    Prime ReporterBy Prime ReporterMarch 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    It was wrong to talk about MGR… Forgive me… Famous actor video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தமிழர்களிடமும் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    அண்மையில் நடைபெற்ற தெலுங்கு நடிகர் காந்தா ராவ் நினைவு விருது வழங்கும் விழாவில் ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் காந்தா ராவின் திறமையைப் புகழ்ந்து பேசும் போது, அவரது வாள் சண்டை திறமை மற்றும் நடிப்பு குறித்து பாராட்டிய ராஜேந்திர பிரசாத், அதனை ஒப்பிட்டு முன்னாள் தமிழக முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆரை குறிப்பிடும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

    காந்தா ராவின் வாள் சண்டை மற்றும் நடிப்பை பார்த்து எம்.ஜி.ஆருக்கே பயம் ஏற்பட்டதாகவும், அதைக் குறிக்கும் வகையில் ஆட்சேபத்திற்குரிய சொற்றொடரை பயன்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவியதும், தமிழ் திரையுலகினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

    பலரும் இந்த கருத்தை கண்டித்து பதிவுகள் வெளியிட்டனர். குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், ராஜேந்திர பிரசாத் தனது பேச்சுக்காக பொதுவாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் ராஜேந்திர பிரசாத் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது விளக்கத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: “எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் கடவுள் போன்றவர். காந்தா ராவ் சாரை புகழ்ந்து பேசும் போது, தவறுதலாக எம்.ஜி.ஆர் குறித்து ஒரு ஆட்சேபகரமான வார்த்தையை பயன்படுத்திவிட்டேன். அதற்காக தமிழ் மக்களிடமும், எம்.ஜி.ஆர் ரசிகர்களிடமும் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது” என தெரிவித்துள்ளார்.

    வருத்தம் தெரிவித்த நடிகர் ராஜேந்திர பிரசாத்!#ActorRejendraprasad #mgr #nadigarsangam #nasser#vishal pic.twitter.com/8dpyBRPW5Z

    — FridayCinema (@FridayCinemaOrg) March 13, 2026

    ராஜேந்திர பிரசாத் வெளியிட்ட இந்த மன்னிப்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் மூலம் இந்த சர்ச்சை தற்காலிகமாக அடங்கும் எனவும் கூறப்படுகிறது.

    Actor Rajendra Prasad Apology MGR எம்ஜிஆர் நடிகர் ராஜேந்திர பிரசாத் மன்னிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.