உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், “திரிஷா வழக்கு தொடர்ந்தாரா அல்லது புகார் அளித்தாரா? உதயநிதியின் இரட்டை அர்த்தப் பேச்சை திரிஷா புரிந்துகொண்டாரா? முதலில் அந்த இரட்டை அர்த்தம் என்ன என்பது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!
தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நோக்கத்திற்காகப் பெண் பாலினத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாக முக்கியப் பிரச்சினையான காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்தத் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

