மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபரை, சுத்தியால் அடித்து, கழுத்தை அறுத்து படுகொலை அதனை செல்ஃபி போட்டோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு, சிக்கலாம் பாளையம் உதயம் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி, கட்டிட தொழிலாளியான இவரது மகன் அஸ்வின்(22), இவர் நேற்று இரவு, தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த, செல்வக்குமார் என்பவரின் மகன்களான தினேஷ்(16), மாதேஷ்(22),ஆகியோருடன்,விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு சென்று மது அருந்தியுள்ளனர்.
டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!
அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் தம்பிகளான, தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து, அதிகாலை 01.45 மணிக்கு, அஸ்வினை சுத்தியால் தலையில் அடித்தும், கத்தியால் கழுத்து அறுத்தும் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார், சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தனிப்படை அமைத்து, தலைமறைவான குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபரை,சுத்தியால் அடித்து,கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ள சம்பவம், கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

