Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தினமும் தொடரும் அக்கிரமங்கள்…முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த உலகில் வாழ்கிறார்? கேட்கிறார் அன்புமணி!
    தமிழ்நாடு

    தினமும் தொடரும் அக்கிரமங்கள்…முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த உலகில் வாழ்கிறார்? கேட்கிறார் அன்புமணி!

    Prime ReporterBy Prime ReporterMarch 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The atrocities that continue daily... In what world does Chief Minister M.K. Stalin live..Anbumani asks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாமகவின் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்முதலம்பேடு கிராமத்தில் தனியாக இருந்த பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலையை திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    மேல்முதலம்பேடு பகுதியில் கடை நடத்தி வந்த பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன், துளசிராமன் ஆகியோர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். மூவரும் கஞ்சா போதையில் தான் இந்த வெறிச்செயலை செய்ததாக கூறப்படுகிறது.

    சில நாள்களுக்கு முன்பு தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள் மதுராந்தகம் அருகில் 14 வயது சிறுமியை இரு மனித மிருகங்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதைத் தொடர்ந்து விளாத்திக்குளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த பதற்றம் விலகும் முன்பே இப்போது கும்மிடிப்பூண்டி அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன் 8 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இப்போது இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் இத்தகைய கொடூரங்கள் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்றன. பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெரும்பாலான குற்றங்களுக்கு மூல காரணமாக திகழ்வது கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் வணிகமும், தாக்கமும் தான். இவற்றைத் தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது.

    பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய நிகழ்வுகள் இனி நடக்காமல் தடுக்க திமுக அரசு ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்காக துரும்பைக் கூட அசைக்கவில்லை.

    The atrocities that continue daily... In what world does Chief Minister M.K. Stalin live..Anbumani asks

    மக்களிடமிருந்து விலகி மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாட்டில் இத்தகையக் கொடூரங்கள் நடப்பது கூட தெரியுமா? எனத் தெரியவில்லை. மக்களைப் பற்றிக் கவலைப்படாத திமுக அரசை வரும் தேர்தலில் விரட்டி அடுக்க மக்கள் தயாராகி விட்டனர். இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படவிருப்பது உறுதி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Anbumani CM Stalin DMK Politics அரசியல் அன்புமணி திமுக முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.