Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே? ரீல்ஸ் வீடியோவை திருப்பி போட்டு அன்புமணி அட்டாக்!
    தமிழ்நாடு

    தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே? ரீல்ஸ் வீடியோவை திருப்பி போட்டு அன்புமணி அட்டாக்!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026Updated:March 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Anbumani attacks by reversing the reels video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க…’ என்று வலியுறுத்திவிட்டு ஆசிரியர்களே இல்லாமல் தேவாவும், ஜீவாவும் எப்படி படிப்பார்கள் முதலமைச்சர் அவர்களே என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதை விட, விளம்பரப் படங்களில் நடிப்பதிலேயே அதிக நேரம் செலவிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று புதிதாக ஒரு விளம்பரப் படத்தில் நடித்து வெளியிட்டிருக்கிறார்.

    முதலமைச்சர் எத்தனை விளம்பரப் படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளட்டும்… அதற்காக மக்களின் வரிப்பணத்தைக் கூட வீணடித்துக் கொள்ளட்டும்… அதையும் கூட பொறுத்துக் கொள்வோம். ஆனால், முதலமைச்சரின் சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா? என்பது தான் நமது வினா.

    கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவா, ஜீவா என்ற சிறுவர்கள் அருகில் உள்ள நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறையே 5 மற்றும் 2 ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் அளவுக்கு புகழ்பெற்றிருக்கும் அவர்கள் ‘படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க…’ என்று வலியுறுத்தி வெளியிட்ட ரீல்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது அலுவலகத்துக்கு அழைத்துப் பேசி வீடியோ வெளியிட்டதுடன், கலெக்டராகவும், காவல்துறை அதிகாரியாகவும் வரும் அளவுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார். இதில் ஒன்றும் தவறு இல்லை.

    முதலமைச்சரின் ஷூட்டிங் பாணியில் பேசுவதாக இருந்தால், அடுத்த ஷாட்டுக்கு கடலூர் மாவட்டம் நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செல்வோம்…. அந்த பள்ளியில் தான் ரீல்ஸ் புகழ் மாணவர்கள் தேவாவும், ஜீவாவும் படிக்கிறார்கள்.

    நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மொத்தம் 5 வகுப்புகள் உள்ளன. 30 மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். ஆனால், அந்தப் பள்ளியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.

    Anbumani attacks by reversing the reels video

    இரு ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு 5 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்த முடியும்? எப்படி தரமான கல்வி வழங்க முடியும்? தேவாவும், ஜீவாவும் எப்படி கலெக்டராகவும், காவல் அதிகாரியாகவும் ஆவதற்கு ஏற்ற அடிப்படைக் கல்வியை பெற முடியும்? சொல்லுங்க முதல்வரே.

    தேவா, ஜீவா பயிலும் பள்ளியின் நிலைமை மட்டும் இவ்வளவு மோசமாக இல்லை. தொடக்கக் கல்வித்துறை சார்பில் 22,831 தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு வெறும் 2 ஆசிரியர்கள் மட்டும் தான். மேலும் 3800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரே ஆசிரியர் தான்.

    தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 29,418 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி எங்கிருந்து கிடைக்கும் முதலமைச்சர் அவர்களே?

    மாணவர்களின் கல்வி மீது கொண்ட ஆர்வத்தால் நீங்கள் இந்த சந்திப்பை நிகழ்த்தவில்லை; விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாதால் மாநிலம் முழுவதும் மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்புவதற்காகத் தான் இந்த விளம்பரப்படத்தை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.

    இத்தகைய விளம்பரப்படங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. இன்னும் சில வாரங்களில் நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களால் மறக்க முடியாத தீர்ப்பை அளிப்பார்கள். அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து தான் நீங்கள் பொழுதைக் கழிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Anbumani CM Stalin DMK Politics அன்புமணி பாமக முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.