அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை உட்கொண்டார்.
உணவின் தரம் மற்றும் சுவை குறித்துக் குழந்தைகளிடம் கேட்டறிந்த முதல்-அமைச்சர், அவர்களுடன் சகஜமாகப் பேசி மகிழ்ந்ததுடன், அரசுப் பள்ளிகளில் கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
ஏற்கனவே தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக சுமார் 15.30 இலட்சம் மாணவ, மாணவியர்கள் பயனடைய உள்ளனர்.
அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!
இத்திட்ட விரிவாக்கத்திற்காக 217.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கும் வகையில், திங்கள் முதல் வெள்ளி வரை கிச்சடி, பொங்கல், உப்புமா மற்றும் சுவைமிக்க உணவு வகைகள் சுழற்சி முறையில் வழங்கப்படவுள்ளன.
திட்டத்தைத் தொடங்கி வைத்ததுடன், பள்ளியில் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவின் சுவை மற்றும் தரம் குறித்துக் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், உணவின் தரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

