Browsing: கோவை

கோவை கணுவாய் அருகே வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பு பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது. வெயில் தாக்கம் காரணமாக ஈரப்பதம் தேடி பாம்பு குடியிருப்புக்குள் வந்த நிலையில், வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

கோவை ஆலாந்துறை அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் 72 வயது மூதாட்டி ஜெசி என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த நோபிள் வாட்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பிரம்மாண்ட மரம் வேரோடு சாய்ந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.

கோவை ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் சலவை தொழிலாளி கைது செய்யப்பட்டார். கொள்ளையடித்த நகைகளை விற்று அந்தப் பணத்தில் மனைவியுடன் சுற்றுலா சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக-வின் வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியது திமுக கூட்டணி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தவெக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக கோவை விமான நிலையத்தில் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தவெக வெற்றியைக் கொண்டாட மருதமலை முருகனை தரிசித்த பாடகர் வேல்முருகன், “சேவல் கொடி பறக்குது” எனப் பாடி விஜய்க்கு தனது வாழ்த்துகளை உற்சாகத்துடன் தெரிவித்தார்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர்கள் அணியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது தேர்தல் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் கிரி பிரசாத், தான் ஒரு கோவை பையன் என்றும், மக்களின் வீட்டில் ஒருவனாகப் பணியாற்றுவேன் என்றும் உருக்கமாகத் தெரிவித்தார்.

கோவை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி நுழைவாயில் அருகே தமிழக வெற்றி கழகத்தினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.