Browsing: கோவை

வால்பாறையில் இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி கனமழை பெய்தது. சூறைக்காற்றால் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து 7 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது; போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவையில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வலி நிவாரண மாத்திரைகளை போதையாக பயன்படுத்தும் இந்த விபரீத பழக்கம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் மது போதையில் தள்ளாடிய இளம் பெண்ணை ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கட்டிட வேலைக்கு செல்லும் பெண் என்பது தெரியவந்தது.

கோவை பாலமலை ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்; சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

கோவை அரசு மருத்துவமனையில் அறையின் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒரு வணிகமாக மாறிவிட்டதாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம், ஜூன் 4 தேர்தல் முடிவுகளே மக்களின் இறுதியான தீர்ப்பு என்று கோவையில் பேட்டி அளித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்கு எண்ணிக்கை விதிமுறைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது; வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், ஊழல்வாதிகள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் கோவையில் பேட்டி.

கோவை கண்ணப்பநகர் டாஸ்மாக் அருகே மின்மாற்றி வெடித்து சிதறியதில் மதுப்பிரியர்கள் மீது ஆயில் தெறித்து தீ விபத்து; 3 பேர் காயம், ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

கோவையில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன; பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின்தடை ஏற்பட்டது.