கோவை பேரூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவிலின் லட்சுமி கடாட்சம் பொருந்திய கல்யாணி யானையைக் கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்கக் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்யாணி யானை வழக்கமாகக் குளிக்கும் தொட்டியின் அருகே, அதன் உடல் முழுவதையும் குளிர்விக்கும் வகையில் புதிதாகப் பலமுனைத் தானியங்கி சவர் (Shower) அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
கூடுதல் குடிநீர் கனெக்ஷனை கட் பண்ணுங்க.. வேலை செய்யாட்டி தூக்கிடுவேன் ‘வார்னிங்’ கொடுத்த MLA..!
மேலிருந்து கொட்டும் குளிர்ந்த செயற்கைச் சாரல் மழையில், கல்யாணி யானை தனது தும்பிக்கையை உயர்த்தி, உற்சாகமாகத் தலையசைத்து, ஆனந்தக் குளியல் போட்டு வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் இந்தச் சவர் குளியல் கல்யாணிக்கு வழங்கப்படுகிறது.

