Browsing: கோவை

மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானை பெத்திக்குட்டை பராமரிப்பு மையத்தில் சிறப்புப் பாகனின் மேற்பார்வையில் ஆரோக்கியமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோவை சுண்டப்பாளையத்தில் முன்பகை காரணமாகத் தவறான தகவல் கொடுத்து மாநகராட்சி அதிகாரிகளுடன் வீட்டை இடிக்க முயன்றதாகப் பெண் ஒருவர் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.

கோவை கருமத்தம்பட்டி அருகே சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேரைக் கைது செய்த மதுவிலக்கு பிரிவு போலீசார், இருபது லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கல்யாணி யானை கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கப் புதிதாக அமைக்கப்பட்ட சவர் மூலம் ஆனந்தக் குளியல் போடும் வைரல் வீடியோ.

கோவை சூலூர் ஊராட்சி ஒன்றிய ஆலோசனைக் கூட்டத்தில், சரியாக வேலை செய்யாத அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எம்.எல்.ஏ சுகுமார் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை வெள்ளக்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

கோவை சின்னியம்பாளையம் டாஸ்மாக் அருகே போதை ஆசாமிகள் நடுரோட்டில் ஒருவருக்கொருவர் மணலை வாரி வீசி அலப்பறை செய்த வினோத ரகளை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

நேபாளத்தில் நடந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கோவை வீரர்கள் 22 பேர் சிலம்பம் மற்றும் யோகா பிரிவுகளில் 26 தங்கம் உட்பட 31 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். கோவை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் மீது கல் வீசிய விவகாரத்தில் 7 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்புவிகப்பட்டுள்ளனர். தண்டவாள ஓரங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ள ஆர்.பி.எப்., கல் வீச்சு புகார்களுக்கு 139 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது.

கோவையில் திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதோடு, கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த காவலர் உதயகுமார் அதிரடி கைது. பேரூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை.