Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கோவை சிறுமி வழக்கில் குற்றவாளிகள் மீது பாய்ந்தது ‘குண்டர் சட்டம்’..!
    கோவை

    கோவை சிறுமி வழக்கில் குற்றவாளிகள் மீது பாய்ந்தது ‘குண்டர் சட்டம்’..!

    Prime ReporterBy Prime ReporterMay 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-minor-girl-murder-accused-goondas-act
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தையே உலுக்கிய கோவை, சூலூர் பள்ளபாளையம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளி மோகன்குமார் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் காவல் சட்டத்தின் (Goondas Act) கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்து உள்ளார்.

    மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (IG) ரம்யா பாரதியின் அதிரடிப் பரிந்துரையின் பேரில் இந்த சட்டம் பாய்ந்து உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில், 10 வயது பிஞ்சுச் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, தென்னைத் தோட்டத்தில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் (33) மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த பாரதிபுரத்தைச் சேர்ந்த மோகன்குமார் (30) ஆகிய இருவரைச் சூலூர் போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

    இதில் போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்ற முக்கியக் குற்றவாளி கார்த்திக், மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் முறிந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.மற்றொரு குற்றவாளி மோகன்குமார் நீதிமன்றக் காவலில் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான்.

    விஜய் அரசு ஒரு காலி பெருங்காய டப்பா.. அதிமுகவை பிளவுபடுத்தி நம்பர் கேம் அரசியல்..!

    பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், குற்றவாளிகள் இருவர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் போக்சோ (POCSO) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த சமூக விரோதிகள் இருவரும் எளிதில் ஜாமீனில் (Bail) வெளியே வர முடியாதபடி ஓராண்டு சிறையில் அடைக்கும் வகையில் “குண்டர் சட்டம்” பாய்ச்ச காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பரிந்துரையின் பேரில், கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (IG) ரம்யா பாரதி, IPS இவர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப் பிரத்யேகப் பரிந்துரைக் கடிதத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினார்.

    ​இந்த பரிந்துரைக் கடிதத்தை பரிசீலித்த கோவை மாவட்ட ஆட்சியர் (Collector) பவன் குமார், IAS, குற்றவாளிகள் இருவரின் கொடூரச் செயலைத் தடுக்கும் பொருட்டும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டும் கார்த்திக் மற்றும் மோகன்குமார் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க நள்ளிரவில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த உத்தரவின் நகல், கோவை மத்தியச் சிறை நிர்வாகம் மற்றும் மருத்துவமனையில் உள்ள குற்றவாளிகளிடம் போலீஸார் மூலம் முறைப்படி வழங்கப்பட உள்ளது.
    துரிதமாகச் செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்தது மட்டுமன்றி, அடுத்த சில தினங்களிலேயே அவர்கள் மீது குண்டர் சட்டத்தையும் பாய்ச்சிய ஐ.ஜி ரம்யா பாரதி மற்றும் கோவை மாவட்ட காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையைப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

    Coimbatore central jail updates Coimbatore Collector Pavan Kumar IAS order Coimbatore minor girl murder case 2026 Goondas Act on Sulur accused Karthik Mohan Kumar POCSO case Kovai local crime news live ஐஜி ரம்யா பாரதி அதிரடி கார்த்திக் மோகன்குமார் ஓராண்டு சிறை குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் கோவை உள்ளூர் குற்றப்பிரிவு செய்திகள் 2026 கோவை சிறுமி கொலை வழக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் சூலூர் பள்ளபாளையம் போக்சோ வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!

    June 8, 2026

    உண்டியல் வசூல், தங்கம் உருக்கியதில் முறைகேடா?.. அமைச்சர் ரமேஷ் அதிரடி எச்சரிக்கை..!

    June 8, 2026

    நாங்க உழைச்சதுக்கு மதிப்பே இல்லையா?.. பொள்ளாச்சியில் வெடித்த தவெக உட்கட்சிப் பூசல்..!

    June 8, 2026

    டாஸ்மாக் தனியார்மயமாகிறதா?.. அரசாணையைச் சுட்டிக்காட்டி அமைச்சர் விளக்கம்..!

    June 7, 2026

    ‘குண்டாஸ்’ கைதியின் வெறிச்செயல்.. இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம்..!

    June 6, 2026

    டிரைவர் இருக்கை அருகே இளம்பெண் செய்த காரியம்.. விபத்து நடக்கும் முன் ஆக்ஷன் எடுங்க..!

    June 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    கடையிலே வாங்க வேண்டாம்.. மாம்பழ ஐஸ்கிரீம் இனி வீட்டிலேயே செய்யலாம்..!

    May 26, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    May 11, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.