காலை உணவுக்கு வித்தியாசமாகவும் சுவையாகவும் எதாவது செய்ய நினைப்பவர்களுக்கும், விரதம் இருப்பவர்களுக்கும் ஜவ்வரிசி கிச்சடி (அல்லது ஜவ்வரிசி உப்மா) ஒரு பெஸ்ட் சாய்ஸ்.
தேவையான பொருட்கள்
- ஜவ்வரிசி – 1 கப்
- உருளைக்கிழங்கு – 1 (பொடியாக நறுக்கியது)
- வறுத்த வேர்க்கடலை பொடி – 3 முதல் 4 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2 அல்லது 3 (நறுக்கியது)
- சீரகம் – 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
- நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு, கொத்தமல்லி தழை – தேவையான அளவு
செய்முறை
Step 1: ஜவ்வரிசியை நன்றாகக் கழுவி, அது மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றி 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் (தண்ணீர் அதிகமானால் குழைந்துவிடும்). கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
அவசரத்திற்குப் பெஸ்ட் சாய்ஸ்.. வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான தக்காளி மிளகு சட்னி..!
Step 2: அதனுடன் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கு நன்றாக வேகும் வரை வதக்க வேண்டும். உருளைக்கிழங்கு வெந்ததும், ஊற வைத்துள்ள ஜவ்வரிசி மற்றும் வறுத்த வேர்க்கடலை பொடியைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும்.
Step 3: ஜவ்வரிசி கண்ணாடி போல் வெந்து வந்ததும், கொத்தமல்லி தழை தூவி, எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கினால் உதிரி உதிரியான ஜவ்வரிசி உப்மா தயார்.

