பிரம்மாண்டமான ‘ராமாயணம்’ படத்தில் இயக்குநர் நிதீஷ் திவாரியின் இயக்கத்தில் சீதை கதாபாத்திரத்திற்கு முதலில் ஸ்ரீநிதி ஷெட்டியைத்தான் அணுகினர் என்றும், அவர் மறுத்த பின்னர்தான் சாய் பல்லவிக்கு அந்த வாய்ப்பு சென்றது என்றும் சமூக வலைதளங்களில் பரவிவந்த வதந்திகளுக்கு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தான் அந்தப் படத்திற்காகச் சீதை கதாபாத்திரத்திற்குரிய காட்சிகளைப் பேசி ஆடிஷன் (Screen Test) செய்ததாகவும், கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு யஷூடன் ஜோடியாக மக்கள் தன்னைப் பார்த்த நிலையில், அதே படத்தில் யேஷ் (ராவணன்) ஜோடியாகத் தான் (சீதை) நடிப்பதை ரசிகர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் தனக்கு இருந்ததாகவும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!
கடினமான ஆடிஷன் மற்றும் முறையான தேர்வு மூலமே சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை ஸ்ரீநிதி ஷெட்டியின் பேட்டி உறுதிப்படுத்தியுள்ளது.

