தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை வெற்றி பெற்று மற்ற சில கட்சிகளை இணைத்து கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. சட்டசபையின் இரண்டாவது நாள் அமர்வு இன்று தொடங்கியது. இதில், யாரும் போட்டியிடாத சபாநாயகர் ஜேசிபி பிரபாகரனும் துணை சபாநாயகராக ரவிசங்கரன் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர், சபாநாயகர் ஜேசிபி பிரபாகரன் மரபு படி அவை முன்னவர் செங்கோட்டை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என இரு கைகளை பிடித்து சபாநாயகரை அமர வைத்தனர்.
முன்னதாக, பாமக எம்எல்ஏ சௌமியா வாழ்த்து தெரிவித்து பேசுகையில், சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபடுவோர் சபாநாயகர் ஜேசிபி பிரபாகரன் சமூக நீதியின் பின்னணியில் வளர்ந்த அவைத்தலைவர், துணைத்தலைவர் நேர்மையான பேரவையை நடத்துவார்கள்.
இந்த சட்டசபையில், பணியாற்றுவதற்கு எனக்கு மிகவும் பெருமையும், பாக்கியமாகவும் கருதுகிறேன். ஆரோக்கியமான விவாதங்கள் நடந்த சட்டமன்றம் தமிழ்நாடு சட்டமன்றம் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் தேவை, பாமக எம்எல்ஏக்கள் பேரவையில் பேசுகையில், சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் அதிகநேரம் தருவார் என நம்புகிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

