நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் புகைப்படம் தமிழ்நாடு அரசின் சிட்கோ (SIDCO – Small Industries Development Corporation) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமியின் புகைப்படம், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகமான ‘சிட்கோ’ (SIDCO) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அரசுத் திட்டம் தொடர்பான விளம்பரம் அல்லது பக்கத்தில் எவ்வித அனுமதியுமின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இசையால் மலர்ந்த காதல்.. 2 ஆண்டுகளாக ரகசியக் காதலில் இருக்கும் துஷாரா விஜயன்..!

சமூக வலைதளங்களில் வைரலான இந்த விஷயத்தைக் கண்ட ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், ஒரு அரசுத் துறை வலைத்தளம் பிரபல நடிகையின் புகைப்படத்தை எப்படி முறையாக அனுமதி பெறாமல் பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர். எங்களின் அனுமதியின்றி இதுபோன்று புகைப்படங்களைப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்ற ரீதியில் திரையுலக வட்டாரத்திலும் இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

