‘சார்பட்டா பரம்பரை’, ‘ராயன்’, ‘வேட்டையன்’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் துஷாரா விஜயன், தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருவரைக் காதலித்து வருவதாகப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
துபாயில் தற்செயலாகத் தொடங்கிய இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. குறிப்பாக, இருவருக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் மீது உள்ள ஈர்ப்பே இவர்களை முதலில் இணைத்த முக்கியப் பாலமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாய்ப்பு தருவதாகக் கூறி மோசமான அனுபவம்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை எல்லி அவ்ராம்..!
தன் காதலர் தனது அனைத்துச் சுபாவங்களையும், கோபங்களையும் பொறுத்துக் கொள்வதாகவும், எப்போதாவது “நானே இப்படி இருக்கிறேனே, இவரைக் காப்பாற்ற கடவுள்தான் வர வேண்டும்” என்று தன் காதலனை நினைத்து சில நேரங்களில் பாவமாக இருப்பதாகவும் அவர் ஜாலியாகப் பகிர்ந்துள்ளார். மேலும், சரியான நேரம் வரும்போது தனது காதலர் யார் என்பதை வெளிப்படுத்துவேன் என்றும் துஷாரா கூறியுள்ளார்.

