கோவை மாவட்டம் ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வெளிநாட்டினரும் அண்டை மாநிலமான பெங்களூர் பாண்டிச்சேரி கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
வால்பாறை பகுதியில் சில்லென்ற காற்றும்,சாரல் மழையும், பனிப்பொழிவும், குளிர் காற்றும் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகின்றனர், குறிப்பாக வால்பாறை அடுத்துள்ள நல்லமுடி காட்சி முனை பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்?.. குற்றவாளிகளின் திட்டத்தை முறியடித்த காவல்துறை..!
வனத்துறை ஒரு நபருக்கு நுழைவு கட்டணமாக 50 ரூபாய் வசூலித்தும் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் கட்டணம் மட்டும் வசூலிப்பது வேதனையாக உள்ளது என்று சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.
இங்கு கழிப்பிட வசதியும் இல்லை என்றும் கார் பார்க்கிங் வசதியும் இல்லை என்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றம் சாட்டுகிறார். சுற்றுலா தளங்களில் அடிப்படை வசதி செய்து தர சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

