Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»நெட்டூர் மற்றும் மன்னார்கோவில் சம்பவங்கள்.. அன்புமணி ராமதாஸ் அதிரடி எக்ஸ் பதிவு..!
    தமிழ்நாடு

    நெட்டூர் மற்றும் மன்னார்கோவில் சம்பவங்கள்.. அன்புமணி ராமதாஸ் அதிரடி எக்ஸ் பதிவு..!

    Prime ReporterBy Prime ReporterMay 30, 2026Updated:May 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    anbumani-ramadoss-condemns-tenkasi-nellai-attacks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களுக்குப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

    தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது: சமூகப் பதட்டம் ஏற்பட எந்த வகையிலும் அரசு இடம் கொடுக்கக் கூடாது! தென்காசி மாவட்டம் நெட்டூர் கிராமத்திலும், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவில் கிராமத்திலும் பட்டியலின மக்கள் மீது ஆயுதங்களுடன் வந்த கும்பல்கள் தனித்தனியாக நடத்திய தாக்குதல்களில் 7 பேர் படுகாயம் அடைந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    சமூகப் பதற்றம் நிறைந்த தென் மாவட்டங்களில் இத்தகைய வன்முறைகளை தடுத்து நிறுத்த அரசு தவறியது கண்டிக்கத்தக்கது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் மாதாகோவில் தெருவில் நேற்று மாலை முகமூடி அணிந்தவாறு இரு சக்கர ஊர்திகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், அங்கு நின்று கொண்டிருந்தவர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் நெட்டூரைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 6 பேர் படுகாயமடைந்தனர்.

    அதேபோல், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவில் கிராமத்தில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் மணிகண்டன் என்ற பட்டியலின இளைஞரை அரிவாள்களால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பெரும்பத்து கிராமத்தில் கஞ்சா போதையில் 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் இரு அப்பாவிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பதட்டம் அடங்குவதற்கு வெகுகாலம் ஆனது. அதேபோன்ற நிலை இப்போது ஏற்பட அரசு அனுமதிக்கக்கூடாது. தாக்குதல் நடந்த கிராமங்களில் இயல்பு நிலையை விரைவாகக் கொண்டு வர அரசும், மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுவாகவே நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் சமூகப் பதட்டம் நிறைந்தவை. அங்கு ஏற்படும் சிறு மோதல் கூட பெரும் வன்முறையாக மாறிவிடக் கூடும். இதைக் கருத்தில் கொண்டு தென் மாவட்டங்களில் சமூக மோதல்களோ, பதட்டமோ ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது: சமூகப் பதட்டம் ஏற்பட எந்த வகையிலும் அரசு இடம் கொடுக்கக் கூடாது!

    தென்காசி மாவட்டம் நெட்டூர் கிராமத்திலும், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவில் கிராமத்திலும் பட்டியலின மக்கள்…

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 30, 2026

    Anbumani Ramadoss Twitter post Dr Anbumani Ramadoss PMK news Law and order issue Tamil Nadu Nellai Mannarkovil dalit violence PMK leader latest statement 2026 South Tamil Nadu caste clashes Tenkasi Nettur village attack அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பதிவு தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு விவகாரம் தென் மாவட்டங்கள் சமூகப் பதற்றம் தென்காசி நெட்டூர் கிராம வன்முறை நாங்குநேரி பெரும்பத்து படுகொலை நெல்லை மன்னார்கோவில் பட்டியலின தாக்குதல் பாமக கண்டன அறிக்கை 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.