Browsing: கோவை செய்திகள்
வெள்ளியங்கிரி 4-வது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 32 வயது இளைஞர் உயிரிழப்பு; குடும்பத்தினர் எச்சரித்தும் மீண்டும் மலை ஏறியதால் நேர்ந்த விபரீதத்தால் 7 வயது மகன் தவிப்பு.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் பிரம்மாண்ட மரம் வேரோடு சாய்ந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.
கோவையில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வலி நிவாரண மாத்திரைகளை போதையாக பயன்படுத்தும் இந்த விபரீத பழக்கம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மது போதையில் தள்ளாடிய இளம் பெண்ணை ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கட்டிட வேலைக்கு செல்லும் பெண் என்பது தெரியவந்தது.
கோவை பாலமலை ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்; சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
கோவை அரசு மருத்துவமனையில் அறையின் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒரு வணிகமாக மாறிவிட்டதாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம், ஜூன் 4 தேர்தல் முடிவுகளே மக்களின் இறுதியான தீர்ப்பு என்று கோவையில் பேட்டி அளித்தார்.
கோவை கண்ணப்பநகர் டாஸ்மாக் அருகே மின்மாற்றி வெடித்து சிதறியதில் மதுப்பிரியர்கள் மீது ஆயில் தெறித்து தீ விபத்து; 3 பேர் காயம், ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
கோவையில் 2013-ல் பென்ஷன் நிலுவைத்தொகை வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற கருவூல கணக்காளர் பழனிச்சாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பெண் காவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி நெகிழ்ச்சியுடன் நடத்தப்பட்டது.
