கோவை அரசு மருத்துவமனையில் இன்று மாலை இந்த வட மாநில இளைஞர் கல்லை எடுத்துச் சென்று இந்த அறையின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார். பொதுமக்கள் எதற்காக பூட்டை உடைக்கிறாய் என்று கேட்கும்போது, அவர் கண்டுகொள்ளாதது போல மீண்டும் பூட்டை உடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
திமுக?.. தவெக?.. எக்சிட் போல் குறித்து கார்த்தி சிதம்பரம் காரசார விமர்சனம்..!
இதனால் பொதுமக்கள் மருத்துவமனையின் காவலாளிக்கு தகவல் தந்தனர். காவலாளி காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளார் அதன் பெயரில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வடமாநில இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

