Browsing: கோவை
கோவையில் முதியோரின் மருத்துவ மற்றும் அவசர கால தேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘அபயம்’ 24/7 உதவி சேவையை புவன தர்மம் அறக்கட்டளை தொடங்கியுள்ளது.
கோவையில் மூத்த குடிமக்களுக்கான சுதந்திரமான மற்றும் மருத்துவ வசதியுடன் கூடிய ‘இன்ஃபினியம் ஒன் லைஃப்’ பிரத்யேக குடியிருப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
ஆனைமலை புலிகள் காப்பகம் சிறுமுகை வனப்பகுதியில் இடது முன்னங்காலில் இரும்பு கம்பி சிக்கித் தவித்த பெண் யானைக்கு மயக்க மருந்து கொடுத்து வனத்துறையினர் வெற்றிகரமாகச் சிகிச்சை அளித்தனர்.
கோவையில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த கடுமையான வெயில் தணிந்து, திடீரென பெய்த மழையால் மாநகரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை மர்மநபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் அலுவல் பணி நிமித்தமாக விசாரணைக்குச் சென்ற தலைமை காவலரை மிரட்டிய ஆட்டோ ஓட்டுநரை உக்கடம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் கணவன், மனைவி இணைந்து நடத்திய போதை மாத்திரை மற்றும் கஞ்சா நெட்வொர்க்கைக் கண்டுபிடித்த குனியமுத்தூர் போலீஸார், 1400 மாத்திரைகளைப் பறிமுதல் செய்து தம்பதியைக் கைது செய்தனர்.
கோவை சின்ன தடாகம் பகுதியில் 6-க்கும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை எதிரே கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
