புதிய அரசு தாக்கல் செய்துள்ள இந்த முதல் பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகவும், புதிய நலத்திட்டங்களை உருவாக்குவதற்குப் பதிலாக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பழைய திட்டங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டி (Sticker Politics) விளம்பரம் தேடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலில் வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.2,500-ஆக உயர்த்துவது, 6 இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்குவது மற்றும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி போன்றவற்றுக்கு இம்முறை பட்ஜெட்டில் தெளிவான வழிகள் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்தார்.
நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!
அரசின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.10.98 லட்சம் கோடியைக் தாண்டிவிட்ட நிலையில், இந்த ராட்சதக் கடனை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது குறித்த முறையான திட்டமிடல் பட்ஜெட்டில் இல்லை என்று விமர்சித்துள்ளார்.

