முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான முதல் முழு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நிதி அமைச்சர் மரிய வில்சனால் சட்டப்பேரவையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்பட்டது.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை செப்டம்பர் 8-ஆம் தேதி வரை தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!
பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் மற்றும் பல்வேறு துறைகள் வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி நிதி ஒதுக்கீடுகள் குறித்த விபரங்கள் இந்தத் தொடரில் ஆலோசிக்கப்பட உள்ளன.

