தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மற்றும் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும் வகையில் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் இருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு வந்த அவர், அங்கிருந்து ரயிலில் ஏறி பயணிகளுடன் இணைந்து நந்தனம் மெட்ரோ நிலையம் வரை பயணம் செய்தார்.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் ஓபிஎஸ்?.. விரைவில் தவெகவில் இணைய முடிவு..!
நந்தனம் மெட்ரோ நிலையத்திலுள்ள இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் (Control Centre) ஆய்வு மேற்கொண்ட அவர், அதனைத் தொடர்ந்து கிண்டி கத்திப்பாரா மற்றும் பூந்தமல்லி சாலைப் பகுதிகளில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

