Browsing: கோவை

பொள்ளாச்சி அருகே மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கட்டித் தொழிலாளி அஸ்வின் சுத்தியலால் அடித்து, கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக்கில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், டோர் டெலிவரி அல்லது ஆன்லைன் விற்பனை கிடையாது எனவும் அமைச்சர் விக்னேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.

கோவையில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் மணிவேந்தனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் தெருநாய்களிடம் இருந்து தப்பியோடி மின்மாற்றியில் ஏறிய தேசியப் பறவையான மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் சிறுவர்கள் விளையாடிய பந்து சுவரில் பட்ட தகராறில் பெண்ணைத் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வேலை தேடி கோவை வந்த நவீன் என்பவரை தகராறில் கத்தியால் குத்திக் கொன்ற 8 பேர் கும்பலை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.

கோவையில் இருந்து கேரளாவிற்குக் கடத்தி வரப்பட்ட 7,000 லிட்டர் எரிசாராயத்தை மத்திய நுண்ணறிவுப் பிரிவினர் நள்ளிரவில் அதிரடியாகப் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவையில் வடிவேலு பட பாணியில் வீடுகள் முன்பு வலிப்பு வந்தது போல் நடித்து பொதுமக்களிடம் பணம் பறித்த பெண்ணை ரத்தினபுரி மக்கள் கையும் களவுமாகப் பிடித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ஆடிப்பெருக்கையொட்டி கோவை பேரூர் படித்துறையில் வழிபாடு நடத்தக் குவிந்த மக்கள் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றமடைந்த நிலையில் குழாய் நீர் மூலம் வழிபாடு நடத்தினர்.