தேவையான பொருட்கள்
- 5 துண்டுகள் நுங்கு
- 2 டேபிள் ஸ்பூன் வெல்லம்/சர்க்கரை/நாட்டுச் சர்க்கரை
- 1/4 கப் நன்னாரி சர்பத்
- 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 டீஸ்பூன் சப்ஜா விதைகள்
- 1 கப் தண்ணீர்
- 4 ஐஸ் கட்டிகள்
செய்முறை
Step 1: முதலில், 1/4 கப் நீரில் 1 டீஸ்பூன் சப்ஜா விதைகளை 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!
Step 2: பின்பு, 2 டேபிள் ஸ்பூன் வெல்லம்/சர்க்கரை/நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த சர்பத்தில் நுங்கை அரைத்து சேர்ப்பதற்கு பதிலாக, சிறு துண்டுகளாக வெட்டியும் சேர்த்துக் கொள்ளலாம். 1/4 கப் நன்னாரி சர்பத்தை சேர்க்க வேண்டும். இதனால் சர்பத் இன்னும் சுவையாக இருக்கும்.
Step 3: பின்னர், அதில் ஊற வைத்த சப்ஜா விதைகள், எலுமிச்சை சாறு 3 டேபிள் ஸ்பூன், ஐஸ் கட்டிகளை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு கலந்தால், சுவையான நுங்கு நன்னாரி சர்பத் ரெடி.

