கோவையில் மது போதையில் தள்ளாடியபடி அமர்ந்து இருந்த இளம் பெண்ணை ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டு காவல் துறையில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சத்தி சாலை சரவணம்பட்டி பகுதியில் 18 வயதான இளம் பெண் ஒருவர் மது போதையில் தள்ளாடியபடி அங்கு உள்ள பள்ளி முன்பாக அமர்ந்து இருந்து உள்ளார். இதை கண்ட அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அந்தப் பெண்ணிடம் விசாரிக்கவே தான் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி அடுத்த சாமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தனது அத்தையுடன் தான் வந்தபோது கார் ஓட்டுனர் ஒருவர் தன்னை காரில் ஏற்றி ஒரு இடத்தில் இறக்கி விடுவேன் என்று கூறியதால் அவரை நம்பி ஏறியதாகவும் தெரிவித்து உள்ளார்.
விண்ணைப் பிளந்த கோவிந்தா கோஷம்.. பாலமலை ரங்கநாதர் கோவில் திருவிழா..!
மேலும் அந்த நபர் ஆடையை கலைந்து தரையில் படுக்குமாறு கூறியதாகவும், ஆனால் அது தனக்கு பிடிக்கவில்லை எனவும் கூறிய அந்த இளம் பெண் கண்ணீர் விட்டு அழவே சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகளிர் காவல் நிலைய போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பெண் தனது அத்தையுடன் கட்டிட வேலைக்கு சென்று வருவதும் அவ்வப்போது மது போதையில் ஆங்காங்கே செல்வதும் தெரிய வந்தது. தொடர்ந்து காவல் துறையினர் அப்பெண்ணை எச்சரித்ததுடன் ஒரு பெண் காவலரை நியமித்து அவரை அவரது இல்லத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதன் இடையே மது போதையில் அப்பெண் தள்ளாடியபடி அமர்ந்துள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

